உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த சில நாட்களுக்கு முன் ட்விட்டர் நிறுவனத்தை கை வசப்படுத்தியுள்ள நிலையில், இன்னும் சில நாட்களில் முழுமையாக தனட்து கட்டுபாட்டில் கொண்டு வரும் போது அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அதனை நிரூபிக்கும் விதமாக, முக்கிய கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே ட்விட்டர் தளத்தைத் தொடர்ந்து விமர்சித்து வந்த எலான் மஸ்க், டிவிட்டர் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக இருப்பதாக வெளிப்படையாகவே கூறி வந்தார். ட்விட்டரை 44 பில்லியன் டாலர்களுக்கு வாங்கிய எலோன் மஸ்க் இப்போது பல பெரிய மாற்றங்களைச் செய்யும் மனநிலையில் இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு ட்விட்டர் தளத்தில் நிரந்திர தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில். இது குறித்து கருத்து தெரிவித்த எலான் மஸ்க், ட்விட்டரில் முன்னாள் அதிபர் ட்ரம்பிற்கு தடை செய்யப்பட்ட தால், அவரது குரல் ஒலிக்காமல் போகவில்லை, மாறாக வலதுசாரிகள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் அவரது கருத்து இன்னும் விரைவாக சென்றடைந்துள்ளது என்றார். இந்தத் தடை தார்மீக ரீதியாகத் தவறானது என்பதோடு, முட்டாள் தனமானது” என்றார். தன்னை பேச்சு சுதந்திரத்திற்கு ஆதரவாளராக எலான் மஸ்க் தொடர்ந்து காட்டிக் கொள்ளும் நிலையில், ட்ரம்பை மீண்டும் ட்விட்டர் தளத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன் எனவும் தெரிவித்தார்.
மேலும் படிக்க | இனி ட்விட்டரை பயன்படுத்த கட்டணம் வசூல்; எலோன் மஸ்கின் அதிரடி திட்டம்
மைக்ரோ-பிளாக்கிங் தளத்தின் கட்டுப்பாட்டைக் குறைக்கும் மஸ்க்கின் நோக்கத்தின் தெளிவான சமிக்ஞையாகக் காணப்படும் நிலையில், பில்லியனர் அவரும் ட்விட்டர் இணை நிறுவனர் ஜாக் டோர்சியும் நிரந்தரத் தடைகள் மிக அரிதானதாகவும், அதிக ஸ்பேம்களை பதிவு செய்யும் கணக்குகளுக்கு மட்டுமே இருக்க வேண்டும் என நினைப்பதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.
“தவறான மற்றும் மோசமான” ட்வீட்கள் நீக்கப்பட வேண்டும் அல்லது மறைக்கப்பட வேண்டும். அதோடு தற்காலிக கணக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவது, அதாவது தற்காலிகமாக தடை செய்யப்படுவது பொருத்தமானதாக இருக்கும் என்று எலான் மஸ்க் கூறினார்.
ஜனவரி 6, 2021 அன்று அமெரிக்க கேபிடல் மீதான வன்முறை தாக்குதலுக்குப் பிறகு முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ட்விட்டரில் நிரந்தரமாக தடை செய்யப்பட்டார். ட்விட்டர் தனது பதிவுகளின் மூலம் “மேலும் வன்முறையைத் தூண்டும் அபாயம்” உள்ளது என கூறி நிரந்தர தடை விதிக்கப்பட்டது.
மேலும் படிக்க | புதிய ட்விட்டர் CEO நியமிக்க எலோன் மஸ்க் திட்டம்; அச்சத்தில் ட்விட்டர் ஊழியர்கள்
88 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்டிருந்த ட்ரம்பின் ட்விட்டர் கணக்கு நிரந்திரமாக தடை செய்யப்பட்டது. பல ஆண்டுகளாக சமூக ஊடக நிறுவனங்கள் சக்திவாய்ந்த உலகளாவிய தலைவர்களின் கணக்குகளை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என்பது பற்றிய விவாதம் நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், அனுமதி கொடுக்கப்பட்டால் கூட ட்விட்டருக்கு திரும்ப மாட்டேன் என்று டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் கூறியிருந்தார். அவரது சொந்த சமூக ஊடக செயலியான ட்ரூத் சோஷியல் பிப்ரவரி பிற்பகுதியில் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் தொடங்கப்பட்டது. டிரம்ப் தனது செய்திகளை புதிய தளத்தில் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். அதில் அவருக்கு 2.7 மில்லியன் பாலோயர்கள் உள்ளனர்.
ட்ரம்பை மீண்டும் டிவிட்டர் தளர்த்திற்கு கொண்டு வருவேன் என டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி கூறுவது, டிவிட்டர் தளத்திற்கு எந்த அளவிற்கு மாற்றங்களைச் செய்வார் என்பது குறித்த பல எதிர்பார்ப்புகளை எழுப்பியுள்ளது.
மேலும் படிக்க | எலான் மஸ்கின் ஆட்குறைப்பு திட்டம்; அச்சத்தில் ட்விட்டர் பணியாளர்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR