கர்நாடகாவில் புதிதாக திறக்கப்பட்ட மிதவை பாலம், இரண்டே நாளில் சேதமடைந்ததால் அந்த பாலம் மூடப்பட்டது.
உடுப்பி மாவட்டத்தில் உள்ள மல்பே கடற்கரையில் 100மீட்டர் நீளத்துக்கு 80லட்ச ரூபாய் செலவில் மிதவை பாலம் அமைக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் நடந்து சென்று அழகை ரசிக்க ஏதுவாக உருவாக்கப்பட்ட இந்த பாலம் கடந்த 6ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த 8ஆம் தேதி மிதவை பாலம் கடுமையாக சேதமடைந்ததும் அப்போது சுற்றுலாப் பயணிகள் சிலர் கடலில் விழுந்ததும் தெரியவந்துள்ளது. கடலில் விழுந்தவர்களை அங்கிருந்த பாதுகாவலர்கள் பத்திரமாக மீட்டதால், உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. கடல் சீற்றத்தால் மிதவை பாலம் சேதமடைந்ததால் , தற்காலிகமாக அந்த பாலம் மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM