விழுப்புரம்:
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:
நீட் தேர்வு
முடிந்த பிறகுதான் இந்த ஆண்டு என்ஜினீயரிங் படிப்பதற்கான கலந்தாய்வு நடத்தப்படும். ஏனென்றால் என்ஜினீயரிங் கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்கள் நீட் தேர்வுக்கும் விண்ணப்பிக்கிறார்கள்.
நீட் தேர்வு
முடிவு வந்ததும் வெற்றிபெறும் மாணவர்கள் என்ஜினீயரிங் கல்லூரியில் சேராமல் மருத்துவ படிப்புக்கு செல்கின்றனர்.
எனவே இதுபற்றிய கலந்தாய்வு கூட்டம் வருகிற 17ந் தேதி நடத்தப்பட உள்ளது. இதுபற்றி பெற்றோர்களுடன் ஆலோசிக்கப்பட உள்ளது. வெளிநாடு சென்று படிக்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் அளிக்கும் கட்டணம் அதிகம் உள்ளதாக குற்றச்சாட்டு எழுகிறது. இந்த கட்டண உயர்வு உடனே குறைக்கப்படும்.
வருகிற கல்வி ஆண்டு முதல் அரசு கலைக்கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும். இந்த தொகை அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.