கலவரங்களின் போது ஆம்புலன்ஸ்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என ஆம்புலன்ஸ் சாரதிகள் சங்கம் நாட்டில் உள்ள அனைத்து மக்களிடமும் விசேட கோரிக்கையை முன்வைத்துள்ளது.
அலரிமாளிகைக்கு முன்பாகவும் காலி முகத்திடலிலும் இடம்பெற்ற கலவரத்தின்போதும், பல அம்பியூலன்ஸ்கள் தாக்கப்பட்டுள்ளன என்று சங்கத்தின் தலைவர் டபுள்யூ. டி விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், நோயாளர்களை விரைவில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதுடன், அனைத்து நோயாளர்களின் உயிர்களையும் காப்பாற்ற ஆம்புலன்ஸ் சாரதிகள் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், அம்புலன்ஸ்கள் மீது தாக்குதல்கள் இடம்பெறுவது மேலும் தொடர்ந்தால், பொலிஸ் பாதுகாப்பின்றி நோயாளர்களை ஏற்றிச் செல்ல முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.