இந்தியாவில் ஆன்லைன் உணவு டெலிவரி, குவிக் டெலிவரி சேவைக்கான வர்த்தகம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வந்தாலும் முதலீடு, ஐபிஓ, டாலர் மதிப்புச் சரிவு, ESOP இழப்பு, ஊழியர்கள் வெளியேற்றம், டெலிவரி ஊழியர்கள் பற்றாக்குறை எனப் பல பிரச்சனைகளை இத்துறை நிறுவனங்கள் எதிர்கொண்டு வருகின்றன.
இதன் எதிரொலியாக நாட்டின் முன்னணி ஆன்லைன் உணவு மற்றும் உணவு பொருட்கள் டெலிவரி செய்யும் நிறுவனமான ஸ்விக்கி சென்னை உட்பட 6 முக்கியமான நகரங்களில் தனது முக்கியமான சேவையை நிறுத்தியுள்ளது.
சோமேட்டோ டெலிவரி ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. தீபிந்தர் கோயல் ரூ.700 கோடி நன்கொடை..!
ஸ்விக்கி நிறுவனம்
ஸ்விக்கி நிறுவனம் மாத சந்தா அடிப்படையில் இயங்கும் சூப்பர்டெய்லி சேவையை முடக்க உள்ளதாக ஸ்விக்கி நிறுவனத்தின் தலைவர் பானி கிஷன் தனது பிளாக் போஸ்ட்டில் தெரிவித்துள்ளார். இதன் மூலம் சூப்பர்டெய்லி (SuprDaily) வாடிக்கையாளர்கள் இச்சேவையைப் பெற முடியாது.
உணவு மட்டும்
ஸ்விக்கி உணவு மட்டுமே டெலிவரி செய்து வந்த நிலையில் பால், பிரெட் மற்றும் இதர மளிகை பொருட்களை டெலிவரி செய்ய வேண்டும் என்பதற்காக 2018வ் சூப்பர்டெய்லி நிறுவனத்தைக் கைப்பற்றியது.
பானி கிஷன்
சூப்பர்டெய்லி நிறுவனத்தின் நிறுவனரான பானி கிஷன், ஸ்விக்கி கைப்பற்றலுக்குப் பின்பு துணை நிறுவனர் என்ற பதவி பெற்று ஸ்விக்கி நிறுவனத்தில் இருந்துக்கொண்டு பானி கிஷன் சூப்பர்டெய்லி வர்த்தகத்தை நிர்வாகம் செய்து வந்தார்.
உயர் அதிகாரிகள் வெளியேற்றம்
ஸ்விக்கி நிறுவனம் அதன் சந்தா அடிப்படையிலான சூப்பர்டெய்லி சேவையைத் தாய் நிறுவனமான பண்ட்ல் டெக்னாலஜிஸில் ஒரு வணிகப் பிரிவில் ஒருங்கிணைத்ததாக நிறுவனம் கூறியது. இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பரில், சுப்பர் டெய்லியின் இணை நிறுவனர்களான புனித் குமார், ஷ்ரேயாஸ் நாக்தவானே மற்றும் ரோஹித் ஜெயின் ஆகியோர் ஸ்விக்கியில் இருந்து வெளியேறினர்.
5 நகரங்கள்
இந்நிலையில் தற்போது டெல்லி என்சிஆர், மும்பை, புனே, ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் சூப்பர்டெய்லி செயல்பாடுகளை மே 12ஆம் தேதி முதல்நிறுத்தி வைக்கும் என்று கிஷன் ஊழியர்களுக்கு மின்னஞ்சலில் தெரிவித்தார்.
7 நாட்கள்
மேலும் சூப்பர்டெய்லி வேலெட்டில் இருக்கும் பணம், சூப்பர் ஆக்சஸ் சப்ஸ்கிரிப்ஷன் வைத்துள்ளவர்களுக்கு மீதமுள்ள நாட்களுக்கான பணத்தை அடுத்த 5 முதல் 7 நாட்களில் பேமெண்ட் வேலெட் அல்லது வங்கி கணக்கிற்குச் செலுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
7 மணிக்குள்
சூப்பர்டெய்லி என்பது காலை 7 மணிக்குள் வீட்டில் தினசரி தேவைப்படும் பொருட்களைத் தினமும் டெலிவரி செய்யும் சேவை. இதேபோன்ற சேவையைப் பிக் பேஸ்கட் டெய்லி அளிக்கிறது.
ஜீனி சேவை
5 நகரங்களில் சேவை நிறுத்தப்பட்ட நிலையில் பெங்களூரில் தனது சேவைகளைத் தொடரும் என்றும் பிற நகரத்தில் அதன் முயற்சிகளைத் தொடரவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ஸ்விக்கி செவ்வாயக்கிழமை மும்பை, ஹைதரபாத், பெங்களூரில் செயல்படுத்தி வந்த ஜீனி சேவையை (pick-up and drop-off Genie service) நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.
Swiggy stops SuprDaily service from May 12 chennai, other 4 cities
Swiggy stops SuprDaily service from May 12 chennai, other 4 cities சேவையை நிறுத்திய ஸ்விக்கி.. சென்னை வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..!