இதயமே இதயமே… 'கேத் லேப்'ன் முக்கியத்துவம் அறிவோம்!

கேத் லேப்… என்ன நடக்கிறது இங்கே?

கேத்தட்டெரைசேஷன் லேப் (Catheterization lab) என்பதன் சுருக்கமே கேத் லேப். பலவிதமான நவீன மருத்துவ உபகரணங்களுடன் இருக்கும் இந்த அறையில் இதயம் சார்ந்த பல்வேறு சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் கேத் லேப் என்பது ஆபரேஷன் தியேட்டர் கிடையாது என்பதை நினைவில் கொள்ளவும். அங்கே மயக்க மருந்து கொடுக்கப்படும், ஆனால் கேத் லேபில் மரத்துப் போகும் மருந்து கொடுத்து, பெரும்பாலும் நோயாளி சுய நினைவில் இருக்கும்போது சிகிச்சை வழங்கப்படுகின்றது. ஆஞ்சியோகிராம், இ.சி.ஜி, எக்கோ, சிடி ஸ்கேன், கார்டியாக் எம்.ஆர்.ஐ உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொண்டு அடுத்தகட்ட சிகிச்சையை கேத் லேபில் வழங்க முடியும்.

அவசரகால சிகிச்சைக்கு ஏற்றது!

திடீரென ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டால், உடனடியாக அவரை கேத் லேப்பிற்கு அழைத்து வர வேண்டும். இங்கே ஆஞ்சியோகிராம் எனப்படும் சிறப்பு எக்ஸ் ரே பரிசோதனை மூலம் அடைபட்ட ரத்த நாளத்தைக் கண்டுபிடிக்கலாம்.

கேத்தட்டர் எனப்படும் சன்னமான பிளாஸ்டிக் குழாயின் முனையில் பலூன் போன்ற அமைப்பு அல்லது பிற மெல்லிய உபகரணத்தைப் பொருத்துகிறோம். கால் அல்லது கையில் இருந்து இதயத்திற்குச் செல்லும் ரத்த நாளத்தின் வழியே இந்தக் குழாயைச் செலுத்தி, இதயத்தின் பிரச்னை உள்ள பகுதியை அடைகிறோம். குறுகிய இடத்தை பலூன் கொண்டு விரிவடையச் செய்து, அங்கே ஸ்டென்ட் எனப்படும் ஸ்ப்ரிங் போன்ற பொருள் பொருத்தப்பட்டு, இதயத்தின் செயல்பாடு சீராக்கப்படுகிறது. இந்தச் செயல்முறைக்குப் பெயர் ஆஞ்சியோபிளாஸ்டி ஆகும். இவ்வாறு அவசரகாலத்தில் மிகுந்த பேருதவியாக விளங்குகிறது கேத் லேப்.

இதய வால்வு பிரச்னைகளுக்குத் தீர்வு…

இதயத்தில் நான்கு வால்வுகள் உள்ளன. உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் இந்த வால்வுகளின் வழியாகவே ரத்தம் பாய்கிறது. சில நேரங்களில் இந்த வால்வுகளின் பாதை குறுகிவிடும், இந்த நிலையை ஸ்டெனோசிஸ் என்கிறோம். குறுகிய வால்வின் பாதையை பலூன் மூலம் விரிவடையச் செய்ய முடியும். இந்தச் செயல்முறைக்குப் பெயர் பலூன் வால்வோட்டமி ஆகும்.

இதேபோல இதயத்தின் பழுதுபட்ட வால்வை செயற்கை வால்வு கொண்டு மாற்றும் சிகிச்சையையும் கேத் லேபில் செய்ய முடியும். டிரான்ஸ்கேத்தட்டர் அயோர்டிக் வால்வு ரீப்லேஸ்மென்ட் (TAVR) எனும் முறை மூலம் இதயத்தின் அயோர்டிக் வால்வு மாற்றி அமைக்கப்படுகிறது.

இதயம் துடிக்கும்போது அதன் தசைகள் உராய்வினால் சேதமடையாமல் இதயத்தைச் சுற்றியுள்ள பெரிகார்டியம் என்கிற நுண்ணிய படலம் தடுக்கிறது. கேன்சர், தொற்று மற்றும் விபத்து உள்ளிட்ட காரணங்களால் இந்தப் படலத்துக்குள் நீர் கோத்துக்கொண்டால், அதனை நீக்கவும் கேத் லேப் உதவுகிறது.

இதயத்தின் துடிப்பு மற்றும் மின்னோட்டப் பிரச்னைகளுக்கான தீர்வு…

இதயத்தைக் காக்க சில கருவிகள் பேருதவி புரிகின்றன. இவற்றை இதயத்தின் அருகே பொருத்த கேத் லேப் அவசியமாகும்.

சைனோ ஆரிகுளர் நோடு (SA Node) எனும் பகுதியில்தான் இதயத்துடிப்பிற்கான மூலம் இருக்கிறது. இது பழுதுபட்டால் இதயத் துடிப்பு குறைய வாய்ப்புள்ளது. இதனால் தலைச்சுற்றல், மயக்கம் வரக்கூடும். இதனைச் சரி செய்ய உதவும் சிறு கருவிதான் பேஸ் மேக்கர். பேஸ் மேக்கர் வயர்களை இதயத்துக்குள் இணைத்து, கருவியை நெஞ்சுக்கூட்டுக்குள் வைத்துத் தைக்கப்படுகிறது. துடிப்பு குறைவாகும்போது பேஸ் மேக்கர் செயற்கை துடிப்பை உருவாக்கி இதயத்தை வேலை செய்ய வைக்கிறது.

சில சமயம் இதயத்துடிப்பு தாறுமாறாக அதிகரித்து விடும். இதனைச் சரி செய்ய ICD (Implantable cardioverter-defibrillator) என்ற சிறிய கருவி உதவுகிறது. இதனை நெஞ்சுக்கூட்டுக்குள் பொருத்துவதால், அதீத இதயத் துடிப்பு ஏற்படுவதைக் கண்காணித்து, தேவையானபோது ஒரு ஷாக் கொடுத்து அதைச் சரி செய்து நோயாளியின் உயிரையே காப்பாற்றிவிடுகிறது.

வயதானவர்களுக்கு இதயத் தசைகளின் செயல்பாட்டில் பாதிப்பு வரும். இவர்களின் இதயக் கீழறைகளை (Ventricles) CRT-D (Cardiac Resynchronization Therapy-Defribrallator) எனும் கருவி மூலம் தூண்டி, இதயத்தின் ரத்த ஓட்டத்தை சீர் படுத்தலாம். அதீத இதயத் துடிப்பையும் இக்கருவி சீராக்குகிறது.

இதேபோல இதயத்தின் மின்னோட்டத்தில் பிரச்னை ஏற்பட்டால் இதயம் சீரற்று துடிக்க ஆரம்பித்து விடும். இச்சமயத்தில் இதயத் துடிப்பை 3D மேப்பிங் செய்து, மின்சாரக் கோளாறு ஏற்பட்ட இடத்தைத் துல்லியமாகக் கண்டறிந்து, அங்கே சிறிய அளவில் ரேடியோ ஃப்ரீக்வென்சி அப்லேஷன் (Radiofrequency Ablation) செயல்முறையைச் செய்தும் நோயாளியைக் காப்பாற்ற முடியும்!

ஏட்ரியல் செப்டல் டிஃபெக்ட் என்பது இதயத்தின் இரு அறைகளுக்கு நடுவே உள்ள மென்படலத்தில் காணப்படும் துளை அல்லது திறப்பாகும். இதனை சிறு உலோகக் கருவி கொண்டு மூடுவதையே ‘டிவைஸ் குளோஷர் (Device Closure) என்கிறோம். தொடை வழியாக, வயர் மூலம் உலோகக் கருவி எடுத்துச் செல்லப்பட்டு, இதயத்துளை இருக்கும் பகுதியில் பொருத்தப்படுகிறது. நாளடைவில் உலோகத்தின் மீது இதயத் திசுக்கள் வளர்ந்து அதைப் பிடித்துக்கொள்கின்றன. இதயத் துளைகளின் நிலையைப் பொறுத்து Atrial Septal Device Closure (ASD), Ventricular Septal Device Closure (VSD) மற்றும் Patent Ductus Arteriosus Device Closure (PDA) ஆகிய முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

குளோபல் மருத்துவமனையின் கேத் லேப் வசதி

சென்னை பெரும்பாக்கம் கிலெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையில் நவீன வசதிகள் அடங்கிய கேத் லேப் வசதி உள்ளது. மேலும், அனுபவம் மிக்க மருத்துவர்களின் துணையுடன் இதயம் தொடர்பான பிரச்னைகளை விரைவாக, உடலில் எந்தத் தழும்புகளும் இன்றி சரி செய்துகொள்ளலாம்!

அப்பாயின்ட்மென்ட்களுக்கு: 044 – 4477 7000

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.