இலங்கை மக்களுக்கு உதவ ஒரு மாத சம்பளத்தை வழங்கிய சபாநாயகர் அப்பாபு

சென்னை:
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள மக்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார். இதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கி உள்ளது.
இதையடுத்து, இலங்கை மக்களுக்கு உதவி செய்வதற்கான முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வந்தவண்ணம் உள்ளது. இலங்கை மக்களுக்கு நேசக்கரம் நீட்டும் விதமாக, முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு திமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டது.  திமுக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தங்களின் ஒரு மாத ஊதியத்தை முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவார்கள் என்று திமுக தலைமை கழகம் அறிவித்தது.
இந்நிலையில், இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் சபாநாயகர் அப்பாவு, தனது ஒரு மாத ஊதியத்தை வழங்கி உள்ளார். சென்னை, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, ஒரு மாத சம்பளத்திற்கான காசோலையை அவர் வழங்கினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.