‘காவலன்100 செயலி வேஸ்ட்’: பிரபல மோட்டார் சைக்கிள் வீராங்கனை நிவேதா ஜெஸ்ஸிகா பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை: சென்னை காவல்துறை சார்பில் கடந்த 2018ம் ஆண்டு ‘காவலன் செயலி’ அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த செயலி செயல்பட வில்லை, வேஸ்ட் என பிரபல மோட்டார் சைக்கிள் வீராங்கனை நிவேதா ஜெஸ்ஸிகா தமிழ்நாடு காவல்துறையை விமர்சித்துள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சியின்போது, காவலன் டயல் 100 (KAVALAN Dial 100) மற்றும் காவலன் எஸ்ஓஎஸ் (KAVALAN SOS)  என்ற இரண்டு செல்போன் செயலியை அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். இந்த செயலிகள் மூலம் மக்கள் நேரடியாக மாநில தகவல் தலைமை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள முடியும் என்று காவல்துறை தெரிவித்தது. ஆனால், தற்போது அந்த செயலி கள் வேலைசெய்யவில்லை என்பது, மோட்டார் சைக்கிள் வீராங்கனையான நிவேதா ஜெஸ்ஸிகா குற்றச்சாட்டின் மூலம் தெரிய வந்துள்ளது.

பிரபல மோட்டார் சைக்கிள் வீராங்கனையான நிவேதா ஜெஸ்ஸிகா. இவர் இரண்டு முறை தேசிய மோட்டார் சைக்கிள் சாம்பியன் பட்டம் வென்றவர். பெண்களுக்கான மோட்டார் சைக்கிள் கிளப்பின் என்ற நிறுவனத்தின் உரிமையாளராக இருந்துவருகிறார் இவர் நேற்று பணி முடிந்து அண்ணாநகரில் இருந்து வீடு திரும்பியபோது மர்ம நபர் தன்னை  இருசக்கர வாகனத்தில் தன்னை பின் தொடர்ந்ததாகவும், இதனால், தனது பாதுகாப்புக்காக, சென்னை காவல்துறை அறிமுகப்படுத்திய  காவலன் எஸ்.ஒ.எஸ். (SOS Emergency) செயலியை பயன்படுத்தினேன். ஆனால், அது செயல்படவில்லை என குற்றம் சாட்டி உள்ளார்.

தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு செல்லும் போது, கருப்பு பேண்ட் மற்றும் வெள்ளை சட்டை அணிந்த மர்ம நபர் அசோக் பில்லர் பகுதி யிலிருந்து தன்னை பின் தொடர்ந்ததாகவும்,  அந்த மர்மநபர் ஆலந்தூர் வரை தன்னை பின்தொடர்ந்து வந்ததாகவும், பின்னர் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே தனது குடும்ப உறுப்பினர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளுடன், சிறிது நேரம் கழித்து,   அந்த மர்ம நபர் சென்று விட்டதாக நினைத்து வீட்டுக்கு செல்ல முற்பட்டபோது மீண்டும் அந்த மர்ம நபர் தன்னை பின் தொடர்ந்த தாகவும் இரவு ஒரு மணி அளவில் லக்கி கல்யாண மண்டபம் பகுதி கடந்து செல்லும்போது அந்த மர்ம நபர் தன்னிடம் ஆபாசமாக நடந்து கொள்ள முயன்றதாகவும், தனது செல்போன் பறிக்க முயன்றதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி நான், ஓட்டி வந்த இரு சக்கர வாகனத்தை பசு ஒன்றின் மீது மோதி செல்போனை கீழே தவறி விட்டதாகவும்,  தன்னிடம் தவறாக நடந்து கொண்ட அந்த வாலிபர், தைரியமாக தான் இப்படித்தான் நடந்து கொள்வேன் என மிரட்டி சென்றதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவ்வாறு நடந்து கொண்ட மர்ம நபரை தன் இரு சக்கர வாகனத்தில் துரத்திப் பிடிக்க முயன்றதாகவும் ஆனால் அந்த மர்ம நபர் தப்பி சென்று விட்டதாகவும் நிவேதிதா சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

தனக்கு உதவி கோரி, அந்த சமயத்தில் காவல்துறை வழங்கிய காவலன் SOS செயலியை பயன்படுத்தியதாகவும் ஆனால் எந்தவித பதிலும் காவல் துறையிலிருந்து கிடைக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். பயன்படாத இந்த செயலி எதற்காக கொண்டு வந்தார்கள் என்று ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து ஆதம்பாக்கம் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளதுடன்,  சம்பவம் நடந்த இடத்தில் 3 சிசிடிவி கேமராக்கள் இருப்பதாகவும் தவறாக நடந்து கொண்ட அந்த மர்ம நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக வலைதளத்தில் ஜெஸ்ஸிகா பதிவிட்டுள்ளார்.

வீராங்கனை நிவேதா ஜெஸ்ஸிகாவின் டிவிட் வைரலான நிலையில், காவல்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், காவலன் செயலி உபயோகத்தில் இருக்கிறதா என்பது குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் சென்னை மாநகர காவல்துறை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

‘காவலன்100 செயலி’: அவசர தொடர்புக்கு அறிமுகப்படுத்தினார் முதல்வர் எடப்பாடி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.