கேரளா: காரும், பைக்கும் நேருக்கு நேர் மோதி விபத்து – தூக்கி வீசப்பட்ட இருசக்கர வாகன ஓட்டி

கேரளாவில் காரும், பைக்கும் நேருக்கு நேர் மோதியதில் இருசக்கர வாகன ஓட்டி  தூக்கி வீசப்பட்டார். மேலும் சாலையோர டிரான்ஸ்பார்மரில் இடித்து  காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள சித்துமாலா என்ற கிராம பகுதியில் உள்ள வளைவுப்பகுதியில் கடந்த 9ஆம் தேதி இரவு 9.30 மணி அளவில் காரும் பைக்கும் நேருக்கு நேர் மோதி உள்ளது. இதில் இருசக்கர வாகன ஓட்டி சாலையில் தூக்கி வீசப்பட்டார். அவர் தலைக்கவசம் அணிந்து இருந்ததால் சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
image
ஆனால் இருசக்கர வாகனத்தின்மீது வேகமாக மோதிய கார் அருகில் இருந்த டிரான்ஸ்பார்மரில் மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. துரிதமாக செயல்பட்ட அப்பகுதி பொதுமக்கள் காயமடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
image
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கொல்லம் போலீசார் விசாரணை நடத்தியதில், கார் அதிவேகமாக வந்திருந்தாலும், இருசக்கர வாகன ஓட்டி தான் கவனக்குறைவாக இடது புறத்தில் இருந்து வலது புறமாக திரும்பி உள்ளார் என்பது தெரியவந்தது. இந்த விபத்தின் திகிலடையச் செய்யும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.