“ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னும் இல்ல இப்பாலே” – கமலின் ‘விக்ரம்’ முதல் சிங்கிள் ரிலீஸ்

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ‘விக்ரம்’  படத்தின் “பத்தல பத்தல” பாடலின் முதல் சிங்கிள் வெளியாகியுள்ளது. 

‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’ உள்ளிட்ட 3 தொடர் வெற்றிப்படங்களை கொடுத்து தமிழ் திரையுலகை திரும்பி பார்க்க வைத்தவர் லோகேஷ் கனகராஜ். இதையடுத்து உலக நாயகன் கமல்ஹாசனை வைத்து, தனது அடுத்தப்படத்தை இயக்கி வருகிறார். ‘விக்ரம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம், ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ், ஷான்வி ஸ்ரீவஸ்தவா, அர்ஜூன் தாஸ் ஆகியோர் நடிக்கின்றனர்.

கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரித்துள்ள இந்தப் படம், ஜூன் 3-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ்நாட்டில், உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகியுள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் அண்மையில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் ட்ரெயிலர் இந்தியாவிலிருந்து முதல்முறையாக பிரான்சில் வருகிற 17-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடைபெற உள்ள 75-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது.

image

அதற்கு முன்னதாக ஜூன் 15-ம் தேதி நடக்கும் பிரமாண்ட விழாவில் படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2018-ம் வெளியான ‘விஸ்வரூபம் 2’ படத்திற்குப் பிறகு, கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் கழித்து இந்தப் படம் வெளியாவதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், அனிருத் இசைமைத்துள்ள இந்தப் படத்தின் ‘பத்தல, பத்தல’ முதல் சிங்கிள் இன்று மாலை 7 மணிக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. கமல் எழுதி, பாடியுள்ளதால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தநிலையில், ஸ்பாட்டிஃபை ஆப் மற்றும் ஐ டியூனில் வெளியாகியுள்ளது.

அதில் மத்திய அரசை குறிக்கும் வகையில்,

கஜானாலே காசில்லே….
கல்லாலையும் காசில்லே….
காய்ச்சல் ஜூரம் நிறையா வருது தில்லாலங்கடி தில்லாலே….
ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பாலே….
சாவி இப்ப திருடன் கையில தில்லாலங்கடி தில்லாலே…. என்ற பாடல் வரிகள் நீளுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.