‘விக்ரம்’ பர்ஸ்ட் சிங்கிள் ‘பத்தல பத்தல’…. கமல் எழுதி பாடியுள்ள கும்மாங் குத்து…

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ராஜ்கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரித்திருக்கும் படம் ‘விக்ரம்’.

கமலஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

காளிதாஸ் ஜெயராம், நரேன், ஆன்டனி வர்கீஸ், அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஜூன் 3 ம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் ‘பத்தல பத்தல’ எனும் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் இன்று வெளியானது.

கமல் எழுதி பாடியுள்ள இந்த குத்து பாடலுக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார், சாண்டி மாஸ்டர் நடனம் அமைத்திருக்கிறார்.

2018 ம் ஆண்டு விஸ்வரூபம்-2 திரைப்படத்திற்குப் பின் நான்கு ஆண்டுகள் கழித்து கமலஹாசன் நடிப்பில் வெளியாக இருக்கும் இந்தப் படம் அவரது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

“ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பாலே…. சாவி இப்ப திருடன் கையிலே தில்லாலங்கடி தில்லாலே….” என்ற பாடல் வரிகள் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் எகிறவைத்திருக்கிறார் கமல்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.