பொன்னியின் செல்வன், விருமன், சர்தார் என்று தொடர் படபிடிப்பில் இருந்து வந்தார் நடிகர் கார்த்தி.
பொன்னியின் செல்வன், விருமன் ஆகிய படங்களின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது.
இதனை அடுத்து அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
#கார்த்தி24 என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தை எழுத்தாளரும் இயக்குநருமான ராஜீ முருகன் இயக்கப்போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி ஆகிய படங்களை இயக்கியவர் ராஜீ முருகன்.
கார்த்தி, நாகார்ஜீன், தமன்னா நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய தோழா படத்தின் வசனம் எழுதிய ராஜீ முருகன் தற்போது மீண்டும் கார்த்தியுடன் கைகோர்க்கிறார்.
படத்தின் மற்ற கலைஞர்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.