மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 3 சந்தேக நபர்களும் நாளை அடையாள அணிவகுப்பில் நிறுத்தப்படவுள்ளனர்.
இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்படுள்ளனர்.
ஒரு சந்தேக நபர் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.