மும்பை:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது. ரவிச்சந்திரன் அஷ்வின் சிறப்பாக ஆடி 50 ரன்னும், தேவ்தத் படிக்கல் 48 ரன்னும் எடுத்தனர்.
டெல்லி சார்பில் சேட்டன் சகாரியா, அன்ரிச் நோர்ஜே, மிட்செல் மார்ஷ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஸ்ரீகர் பரத் டக் அவுட்டானார்.
அடுத்து டேவிட் வார்னருடன் ஜோடி சேர்ந்த மிட்செல் மார்ஷ் பொறுப்புடன் ஆடினார். இருவரும் கிடைத்த பந்துகளை பவுண்டரி, சிக்சர்களாக விளாசினர். இருவரும் அரை சதம் கடந்து அசத்தினர். மிட்செல் மார்ஷ் 89 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், டெல்லி அணி 18.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இது டெல்லி அணிபெற்ற 6-வது வெற்றி ஆகும்.