நியூயார்க்,
ஐக்கிய நாடுகள் சபையில் இந்தி மொழியை ஊக்குவிக்க இந்தியா 8 லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 6.18 கோடி ரூபாய்) நிதியை வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக நியூயார்க்கில் உள்ள ஐநா சபைக்கான இந்திய தூதரகம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் ஐநா அவை செய்திகளை இந்தியில் மொழிபெயர்த்து உலகம் முழுவதும் இந்தி பேசும் லட்சக்கணக்கானோரிடம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.
இதற்காக ஐநாவின் உலகளாவிய தகவல் தொடர்பு துறை துணை இயக்குனர் மிடா ஹோசலியிடம், 8 லட்சம் அமெரிக்க டாலருக்கான காசோலையை ஐநாவிற்கான இந்திய தூதர் ரவீந்திரா வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
India contributed $800,000 for continuing to promote #Hindi@UN
Amb/DPR R. Ravindra handed over cheque for Hindi@UN project launched by India in 2018 to disseminate information on UN to Hindi-speaking population across the world.
📖Press Release: https://t.co/eIT8xwT3QGpic.twitter.com/PaVIXa4OHV
— India at UN, NY (@IndiaUNNewYork) May 11, 2022