டெல்லியில் இன்று 970 பேருக்கு கொரோனா; 1,238 பேர் டிஸ்சார்ஜ்

புதுடெல்லி,
டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, டெல்லியில் இன்று 970 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டெல்லியில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 18,97,141 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார். டெல்லியில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26,184 ஆக உள்ளது. அதே சமயம் டெல்லியில் இன்று 1,238 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். 
இதன் மூலம் டெல்லியில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 18,65,755 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் தற்போது 5,202 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.