மகிந்த ராஜபக்சவின் குடும்பமே தப்பிப் பிழைப்பதற்கு தலைதெறிக்க ஓடுவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பிரதமர் பதவியில் இருந்து விலகிய மகிந்த ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறி விட்டதாக செய்திகள் வெளி வந்த நிலையில், அவர் திருகோணமலை கடற்படை தளத்தில் பாதுகாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் இதுதொடர்பாக கூறுகையில்,
‘ராஜபக்ச குடும்பம் தப்பிப் பிழைப்பதற்கு தலைதெறிக்க ஓடுகிறது. இது இனவாத பாசிசத்தின் எதிர்விளைவே ஆகும்.
ஒரே தேசம், ஒரே கலாசாரம் என சிங்கள இனவெறியர்கள் பன்மைத்துவத்திற்கு எதிராக நடத்திய ஒருமைத்துவ கொடுங்கோன்மை மற்றும் தமிழருக்கு எதிரான பாசிச இனவாத ஒடுக்குமுறைகளே முதன்மையான காரணங்கள் ஆகும்’ என தெரிவித்துள்ளார்.
இராஜபக்ஷே குடும்பம் தப்பிப் பிழைப்பதற்குத் தலைதெறிக்க ஓடுகிறது. இது இனவாத ஃபாசிசத்தின் எதிர்விளைவே ஆகும். ஒரே தேசம்-ஒரே கலாச்சாரமென சிங்கள இனவெறியர்கள் பன்மைத்துவத்துக்கெதிராக நடத்திய ஒருமைத்துவ கொடுங்கோன்மை-தமிழர்க்கு எதிரான ஃபாசிச இனவாத ஒடுக்குமுறைகளே முதன்மையான காரணங்களாகும். pic.twitter.com/6udGczXwgr
— Thol. Thirumavalavan (@thirumaofficial) May 11, 2022