தமிழக காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி தேர்தல் ஜூன் 10ம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி புதன்கிழமை அறிவித்தார்.
காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி தேர்தல் தொடர்பாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் கட்சியின் உட்கட்சித் தேர்தல் எவ்வாறு நடத்துவது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
சத்தியமூர்த்தி பவனில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூரியதாவது: “காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி தேர்தல் வருகிற 10 ம் தேதி நடைபெறவுள்ளது. 15 லட்சத்திற்கும் மேல் வாக்காளர்கள் உள்ளனர். காங்கிரஸ் கட்சியின் அடுத்த மாநில தலைவர் ஒரு பெண்ணாக இருக்கலாம்” என்று கூறினார்.
இதனால், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்விகளும் எதிர்பார்ப்பும் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் மட்டுமல்லாமல் தமிழக அரசியல் களத்திலும் எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“