புதுடெல்லி: ஐநா சபை செய்திகளை இந்தியில் மொழி பெயர்த்து உலகம் முழுவதும் உள்ள இந்தி பேசும் லட்சக்கணக்கானோரிடம் கொண்டு செல்லும் நடவடிக்கை, கடந்த 2018ம் ஆண்டு தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக, ஐநா சபையில் இந்தி மொழி பயன்பாட்டை ஊக்குவிக்க, ஒன்றிய அரசு ₹6.16 கோடி நிதியை தற்போது வழங்கியுள்ளது. இதற்கான காசோலையை ஐநா.வின் உலகளாவிய தகவல் தொடர்பு துறையின், செய்தி மற்றும் ஊடகப்பிரிவு துணை இயக்குநரும் பொறுப்பு அதிகாரியுமான மிட்டா கோசலிடம் ஐநா.வுக்கான இந்தியாவின் நிரந்த துணை தூதர் ரவீந்திரா வழங்கினார்.