Tamil Serial Actor Aryan In Kana Kaanum Kalangal Season 3 : பாக்யலட்சுமி சீரியலில் செழியனாக நடித்து பிரபலமான நடிகர் ஆர்யன் தற்போது புதிதாக தொடங்கப்பட்டுள்ள கனா காணும் காலங்கள் தொடரில் நடிக்க உள்ளதாக தகவல் பரவி வரும் நிலையில், பாக்யலட்சுமி சீரியலில் தனக்கு பதிலாக நடித்து வரும் நடிகர் விகாஷ் சம்பத்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியில் குடும்பங்கள் கொண்டாடும் முக்கிய சீரியல் பாக்யலட்சுமி இந்த சீரியலில் சுயநலத்துடன் யோசிக்கும் குடும்பத்தின் மூத்த மகன் செழியன் கேரக்டரில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் ஆர்யன். சமீபத்தில் ஜீதமிழின் செம்பருத்தி சீரியல் நாயகி ஷாபனாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட ஆர்யன் திருமணத்திற்கு சில நாட்களுக்கு பின் பாக்யலட்சுமி சீரியலில் இருந்து விலகினார்.
இந்நிலையில், சமீபத்தில் பாக்யலட்சுமி சீரியலில் இருந்து வெளியேறியது குறித்து ஆர்யனிடம் ரசிகர்கள் பலரும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு பதில் அளித்திருந்த ஆர்யன் இந்த வெளியேற்றம் வேதனையானது என்றும் சில தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியேறியதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில். தற்போது பாக்யலட்சுமி சீரியலில் செழியனாக நடிக்க நடிகர் விகாஷ் சம்பத் ஒப்பந்தாமாகியுள்ளார். தனக்குப் பதிலாக செழியன் கோபிநாத்தாக வரவிருக்கும் எபிசோட்களில் நடிகர் விகாஷ் சம்பத் நடிப்பார் என்று நடிகர் ஆர்யன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். விகாஷ் சம்பத் இதற்கு முன்பு தெய்வத்திருமகள், முள்ளும் மலரும், பொண்ணுக்கு தங்க மனசு போன்ற சீரியல்களில் நடித்திருந்தார்.
இது குறித்து ஆர்யன் தனது இன்ஸ்டாகிராம் பதிவில்,
‘எல்லோருக்கும் வணக்கம்!
பாக்கியலட்சுமி சீரியலில் “செழியன்” கதாபாத்திரத்திற்காக நீங்கள் எனக்கு அளித்த அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.
எனது அன்புச் சகோதரன் விகாஷ் சம்பத் இப்போது புதிய செழியனாக வருவதை வரவேற்கிறேன் அவருக்கும் அதே அன்பையும் ஆதரவையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் ஆர்யன் தற்போது புதிதான ஒடிடி தளத்தில் வெளியாகி வரும் கனா காணும் கலங்கள் சீசன் 3 இன் வரவிருக்கும் எபிசோட்களில் ஆர்யன் நடிப்பார் என்றும் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது வரவு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.