தற்போதைய நிலைமையை கட்டுப்படுத்தவும் மேலும், நாடு அராஜகத்துக்கு ஆளாவதைத் தடுக்கும் வகையில் தற்போது தடைப்பட்டுள்ள, அரச நிருவாகத்தை முன்னெடுப்பதற்காக புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கும் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவித்தார்.
இந்த வாரத்தில் பாராளுமன்றத்தில் பெரும் பான்மையினரின் நம்பிக்கையைக்கொண்ட, அதேபோன்று நாட்டு மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தக்கூடிய பிரதமர் மற்றும் அமைச்சரவையையும் நியமிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகவும் ஜனாதிபதி கூறினார்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ இன்று (11) நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையில் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.