அமெரிக்க நுகர்வோர் பணவீக்கத்தின் வளர்ச்சியின் வேகம் ஏப்ரலில் வெகுவாகக் குறைந்தது, இதற்கு முக்கியமான காரணம் அமெரிக்க எரிபொருள் விலைகள் அதன் வரலாற்று உச்சத்தில் இருந்து குறைந்தது. இதனால் சில்லறை பணவீக்கம் குறைந்துள்ளது.
மேலும் அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் பணவீக்கத்தைக் குறைக்க மே மாதத்திற்கு முன்பே 0.25 சதவீத வட்டியை உயர்த்தினார். இதுவும் பெரிய அளவில் பலன் அளித்துள்ளது.
தனியார் ஊழியர்களுக்கும் மாதம் ரூ.5000 பென்ஷன் வாங்கலாம்.. எப்படி?
அமெரிக்கா பணவீக்கம்
அமெரிக்காவின் நுகர்வோர் விலை குறியீடு ஏப்ரல் மாதம் 0.3% உயர்ந்து 8.3% ஆக உள்ளது. இது 2021 ஆகஸ்ட் மாதத்திலிருந்து மிகக் குறைவான வளர்ச்சி அளவீடு என்று அமெரிக்காவின் தொழிலாளர் துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது. மார்ச் மாதத்தில் நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) 1.2% உயர்ந்திருந்த நிலையில் ஏப்ரல் மாதம் வெறும் 0.3% மட்டுமே உயர்ந்துள்ளது.
நுகர்வோர் விலை பணவீக்கம்
நுகர்வோர் விலை பணவீக்கத்தில் ஏற்பட்ட பின்னடைவு தற்காலிகமானது தான். எரிசக்தி தகவல் நிர்வாகத்தின் படி, மாதாந்திர பணவீக்க விகிதத்தில் பெரும்பாலான பின்னடைவுக்குக் காரணமாக இருந்த பெட்ரோல் விலைகள், தற்போது மீண்டும் உயர்ந்து வருகின்றன, மேலும் இந்த வார தொடக்கத்தில் ஒரு கேலன் எரிபொருள் விலை 4.161 டாலராக ஆக இருந்தது. ஏப்ரல் மாதத்தில் இதன் விலை 4 டாலருக்குக் கீழ் இருந்து குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் – ரஷ்யாவின் போர்
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் பெட்ரோல் விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாக உள்ளது. இந்தப் போர் மூலம் உலகளவில் எரிபொருள் முதல் உணவுப் பொருட்கள் வரையில் அனைத்தின் விலைவாசியும் உயர்த்தியுள்ளது. ஆனால் பணவீக்க பிரச்சனை கொரோனா தொற்றுக் காலத்தில் இருந்தே உள்ளது.
ஜோ பிடன்
அமெரிக்க அதிபர் ஜோ பிடன் செவ்வாயன்று அதிகப்படியான பணவீக்கம் அமெரிக்கக் குடும்பங்களுக்கு அதிகப்படியான வலியை ஏற்படுகிறது என்பதை ஒப்புக்கொண்டார். மேலும் விலைவாசியைக் குறைப்பது தான் முதன்மை பணி என்றும் கூறினார்.
நாணய கொள்கை கூட்டம்
அமெரிக்க மத்திய வங்கி கடந்த வாரம் அதன் நாணய கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதத்தை 0.50 சதவிகிதம் உயர்த்தியது, இது 22 ஆண்டுகளில் மிகப்பெரிய உயர்வாகும். மேலும் அடுத்த மாதம் அதன் பத்திர இருப்பைக் குறைக்கத் தொடங்கும் என்று கூறியுள்ளது.
US inflation slows down to just 8.3% in April; But Fuel price starts gaining in May
US inflation slows down to just 8.3% in April; But Fuel price starts gaining in May அமெரிக்க பணவீக்கம் 8.3% ஆக உயர்வு.. பெட்ரோல் விலை உயர்வை சமாளிக்க முடியாமல் திணறல்..! US inflation slows down to just 8.3% in April; But Fuel price starts gaining in May அமெரிக்க பணவீக்கம் 8.3% ஆக உயர்வு.. பெட்ரோல் விலை உயர்வை சமாளிக்க முடியாமல் திணறல்..!