கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்திய கலைஞர்களுக்கு கவுரவம்

ஒவ்வொரு ஆண்டும் பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா உலக புகழ் பெற்றதாகும். இதில் தாங்களோ, தங்கள் படைப்புகளும் கலந்து கொள்வதை திரையுலகினர் பெருமையாக கருதுவார்கள்.

இந்தாண்டு 75-வது கேன்ஸ் திரைப்பட விழா மே 17ம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த விழாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திரைக்கலைஞர்கள் தனித்தனி குழுவாக கலந்து கொள்கிறார்கள். அந்த வரிசையில் இந்திய திரைத்துறையைச் சேர்ந்த முக்கிய நட்சத்திரங்கள் குழு பங்கேற்க உள்ளது.

இதில், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், கிராமப்புற இசையமைப்பாளர் மற்றும் பாடகர் மாமே கான், பாலிவுட் நடிகர் நவாஸூதீன் சித்திக், நடிகைகள் நயன்தாரா, பூஜா ஹெக்டே, தமன்னா, வாணி திரிபாதி, திரைப்பட தணிக்கை வாரியத் தலைவர் பிரசூன் ஜோஷி, நடிகர் மாதவன், இசையமைப்பாளர் ரிக்கி கேஜ், திரைப்பட தயாரிப்பாளர் சேகர் கபூர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இந்தக் குழு மத்திய தகவல் ஒலிப்பரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் தலைமையில் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள இருக்கிறது. அப்போது, இந்தியக் குழுவிற்கு கேன்ஸ் திரைப்பட விழாவில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. மாதவன் நடித்துள்ள ராக்கெட்ரி திரைப்படம் கேன்ஸ் திரையிடப்பட விழாவில் திரையிடப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.