இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள ஸ்தீரமற்ற தன்மை – சீன தூதுவரை சந்தித்தார் சஜித் (Photo)


இலங்கை அரசியலில் ஒரு ஸ்தீரமற்ற நிலை உருவாகியுள்ள பின்னணியில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சீனத் தூதுவரை இன்று சந்தித்து பேசியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த அனர்த்தமான தருணத்தில் இலங்கைக்கு சகோதரத்துவக் கரம் நீட்ட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சீனத் தூதுவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வெளிப்படைத் தன்மையுடன் நாட்டை நிர்வகித்தல், இலஞ்சம், ஊழல், அடக்குமுறைகளை ஒழிப்பது என்பனவே தனது நிர்வாகத்தில் முதன்மையானதாக இருக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இலங்கையின் தற்போதைய நிலையிலிருந்து மீள்வதற்கு சீனாவின் பெருந்தன்மையான ஆதரவு மிகவும் அவசியமானது எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், தூதுவர் தலையிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவும் கலந்துகொண்டார்.

Gallery



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.