பெங்களூரு : பெங்களூரில் இளைஞர்கள், ‘பைக் வீலிங்’ செய்து, பொது மக்களுக்கு தொந்தரவு கொடுப்பது அதிகரிக்கிறது. இவர்களை கட்டுப்படுத்துவது, போலீசாருக்கு பெரும் தலைவலியாக உள்ளது.பெங்களூரு புறநகர்ப் பகுதிகளில், இளைஞர்கள், பைக் வீலிங் செய்வது வழக்கம்.
ஆனால் இப்போது மக்கள் நெரிசல் அதிகமுள்ள சாலைகளில், வீலிங் செய்ய துவங்கியுள்ளனர்.லக்கரேவின் வெளிவட்ட சாலையில், தினமும் இளைஞர்கள் அபாயகரமான முறையில் வீலிங் செய்கின்றனர். இருள் துவங்கியதும், இளைஞர்கள் பெருஞ்சத்தத்துடன், கி.மீ., கணக்கில் பைக்கில் செல்கின்றனர்.இதுபோன்ற அபாயகரமான செயலால், மற்ற வாகன பயணியருக்கு தொந்தரவு ஏற்படுகிறது. சாலைகளில் போக்குவரத்து நெருக்கடியும் அதிகரிக்கிறது.வீலிங் செய்து விபத்துக்கு காரணமாகின்றனர். மற்ற வாகன பயணியர், பாதசாரிகள் காயமடைந்த சம்பவங்களும் நடந்துள்ளது. உயிரிழப்பும் கூட நடந்துள்ளது.விமான நிலைய சாலையில், இதற்கு முன் அபாயகரமாக வீலிங் செய்தவர்களை, போலீசார் கைது செய்து பாடம் புகட்டினர். ஆனாலும், புத்தி வரவில்லை. தங்களின் உயிருக்கு ஆபத்தை வரவேற்பதுடன், மற்றவரின் உயிருக்கும் அபாயத்தை ஏற்படுத்துகின்றனர். இவர்களை கட்டுப்படுத்த, கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Advertisement