கோவில் திருவிழாவில் தொடரும் உயிர் பலி..!! பக்தர்கள் அதிர்ச்சி..!!

தேனி மாவட்டம் வீரபாண்டியில்பிரசத்தி பெற்ற கௌமாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகின்றது. நேற்று முன்தினம் தொடங்கிய திருவிழா வரும் செவ்வாய்கிழமை வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் ராட்டினங்களுக்கு மின்சார இணைப்பு கொடுக்க உப்பார்பட்டியை சேர்ந்த முத்துக்குமார்(32) என்பவர் இரும்பினால் ஆன தூண் ஒன்றை தூக்கிச் சென்று உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக இருப்பு தூண் மின்சார கம்பியில் உரசியது.

இதில் உடலில் மின்சாரம் பாய்ந்த முத்துகுமார் மருத்துவமனைக்கு கொண்டு செயல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பக்தர்களிடேயே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்பொழுது வீரபாண்டியில் எந்த ராட்டினங்களும் இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதேபோல் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள நாகணம்பட்டி காளியம்மன் கோவில் திருவிழாவில் அம்மனுக்கு நேற்று இரவு அலங்கார மின் விளக்குகள் அமைக்கும் பணியில் சாமியார்புதூர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார் (18) ஈடுபட்டு வந்தார்.

அப்போது உயர் அழுத்த மின் கம்பியில் அவரது கை பட்டதில் தூக்கி வீசப்பட்டார். பலத்த காயம் அடைந்த அவரை ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அண்மைக்காலமாகவே கோவில் திருவிழாக்களின் போது ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகிறது. மதுரை சித்திரை திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். தஞ்சாவூர் அருகே நடந்த தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து 11 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.