உக்ரைனின் முடிவு கைகொடுக்குமா.. செய்வதறியாது திகைக்கும் ரஷ்யா.. எரிபொருள் விலை என்னவாகுமோ?

நேட்டோவில் இணைய உக்ரைன் விருப்பம் காட்டி வந்த நிலையில், அதனை எதிர்த்து கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ரஷ்யா தாக்குதலை தொடங்கியது. அது இப்போது வரையில் தொடர்ந்து கொண்டுள்ளது.

அதேசமயம் ரஷ்யாவுக்கு எதிராக சிறிதும் தளராமல் உக்ரைன் எதிர்த்து நின்று போராடி வருகின்றது.

பல கட்டங்களாக இவ்விரு நாடுகளும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட நிலையில் கூட, அதுவும் சரிவராத நிலையில் மீண்டும் போரானது தொடர்ந்து கொண்டுள்ளது.

சப்ளையை நிறுத்த திட்டம்

இந்த நிலையில் தான் ரஷ்யாவுக்கு மேற்கொண்டு அழுத்தத்தினை கொடுக்கும் விதமாக, ஐரோப்பாவுக்கான கேஸ் அனுப்பும் போக்குவரத்தினை உக்ரைன் நிறுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் இருந்து ஐரோப்பாவுக்கு அனுப்பப்படும் கேஸ் சப்ளையில், மூன்றில் ஒரு பங்கு உக்ரைன் வழியாகவே வழங்கப்படுதாக கூறியுள்ளது.

உக்ரைன் தான் முக்கிய பாதை

உக்ரைன் தான் முக்கிய பாதை

உக்ரைனின் இந்த அறிவிப்பினால் அரண்டு போன ரஷ்யா, அதன் சப்ளையை வேறு பகுதிக்கு மாற்றுவதாகவும் தெரிவித்துள்ளது.

ரஷ்யா – உக்ரைன் இடையேயான பதற்றத்தின் மத்தியிலும், ஐரோப்பாவிற்கு ரஷ்யா எரிவாயு போக்குவரத்து பாதையாக உக்ரைன் உள்ளது.

ஃபோர்ஸ் மஜ்யூர்
 

ஃபோர்ஸ் மஜ்யூர்

உக்ரைனின் கேஸ் பாதையை இயக்கி வரும் GTSOU, புதன் கிழமை முதல் சோக்ரானிவ்கா பாதை வழியாக ஏற்றுமதியினை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இதனை ஃபோர்ஸ் மஜ்யூர் என்றும் தெரிவித்துள்ளது. இது ஒரு வணிகமானது அதன் காட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டு, எதோவென்றால் பாதிக்கப்படும்போது பயன்படுத்தப்படுகிறது.

பதற்றம் அதிகரிக்கலாமோ?

பதற்றம் அதிகரிக்கலாமோ?

உக்ரைனின் இந்த நடவடிக்கையினால் உள்நாட்டு சந்தையில் எந்த தாக்கமும் இருக்க கூடாது என்றும், அரசு எரிசக்தி நிறுவனமான நாப்டோகாஸ் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மொத்தத்தில் உக்ரைனின் இந்த நடவடிக்கையினால் ரஷ்யா உக்ரைன் இடையேயான பதற்றம் மேற்கொண்டு அதிகரிக்கலாமோ என்ற பதற்றமான நிலையே இருந்து வருகின்றது.

பிடி கொடுக்காத ரஷ்யா

பிடி கொடுக்காத ரஷ்யா

எனினும் இதற்கெல்லாம் பிடி கொடுக்காமல் ரஷ்யா சப்ளையில் எந்த பிரச்சனையும் இல்லை. ஐரோப்பாவில் கேஸ் வாங்குபவர்களுக்கு தேவையை பூர்த்தி செய்வதாகவும் காஸ்ப்ரோம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலை அதிகரிக்குமா?

எரிபொருள் விலை அதிகரிக்குமா?

அண்டை நாடுகளை ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் வாங்குவதை தடை செய்யுமாறு அமெரிக்கா வலியுறுத்தி வருகின்றது. இதற்கிடையில் ஏற்கனவே பல நாடுகள் தடை எரிபொருள் இறக்குமதியினை தடை செய்துள்ளன. பல நாடுகளும் தடை செய்ய முயற்சி செய்தும் வருகின்றன. இந்த நிலையில் உக்ரைனின் இந்த தடையானது ரஷ்யாவின் சப்ளையில் தாக்கத்தினை ஏற்படுத்துமோ? இது சர்வதேச அளவில் எரிபொருல் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாமோ என்ற அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

ukraine plans to halt key russian gas way to Europe

ukraine plans to halt key russian gas way to Europe/உக்ரைனின் முடிவு கைகொடுக்குமா.. செய்வதறியாது திகைக்கும் ரஷ்யா.. எரிபொருள் விலை என்னவாகுமோ?

Story first published: Wednesday, May 11, 2022, 15:07 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.