இந்தியாவில் இந்த ஆண்டு உப்பு உற்பத்தி 30 சதவீதம் குறையும் என வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக குஜராத்தில் உள்ள உப்பளங்களில் மார்ச் மாதம் அறுவடை காலமாக இருக்கும். ஆனால் ஏப்ரல் மாதம் 15-ம் தேதிக்கு பிறகுதான் உப்பு அறுவடை காலம் தொடங்கியுள்ளது.
மத்திய அரசு திடீர் உத்தரவு.. முழுவீச்சில் இயங்கும் மின்சார உற்பத்தி ஆலைகள்..!
விலை அதிகரிக்குமா?
மேலும் அக்டோபர் மாதம் தொடங்க வேண்டிய உப்பளங்களின் உற்பத்தி, பருவ மழை காரணமாக டிசம்பர் மாதமே தொடங்கியது. எனவே இந்தியாவில் உற்பத்தியாகும் உப்பின் அளவு 30 சதவீதம் சரிந்துள்ளது. இதனால் இந்தியாவின் உப்பின் விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு
ஏற்கனவே அத்தியாவசிய பொருட்கள் விலை அதிகரித்து வரும் நிலையில், உப்பின் விலையும் அதிகரித்தால் என்ன ஆகும் என சுதாரத்திக்கொண்ட மத்திய அரசு ஏற்றுமதியை தடை செய்வது அல்லது குறைப்பது குறித்து விவாதித்து வருவதாகக் கூறுகின்றன.
இந்தியாவில் உப்பு உற்பத்தி, ஏற்றுமதி
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 30 மில்லியன் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் 10 மில்லியன் டன் உப்பு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 12.5 மில்லியன் டன் உப்பை தொழிற்சாலைகள் பயன்படுத்துகின்றன. மீதம் உள்ள உப்புதான் ரீடெயில் சந்தைக்கு வருகிறது.
உலக நாடுகள்
இந்தியாவை விட அமெரிக்கா, சீனா இரண்டும் உப்பு ஏற்றுமதியை அதிகம் செய்யும் நாடுகளாக உள்ளன. இந்த மூன்று நாட்கள் மட்டும் 55 நாடுகளுக்கு உப்பை ஏற்றுமதி செய்கின்றன.
தமிழ்நாட்டின் நிலை என்ன?
இந்தியாவின் ஒட்டுமொத்த உப்பு உற்பத்தியில் 90 சதவீதம் குஜராத்தில் இருந்துதான் நடைபெறுகிறது. மீதமுள்ள 10 சதவீதம் ராஜஸ்தான், தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கிடைக்கிறது.
தமிழக மாவட்டங்கள்
தமிழ்நாட்டில் தூத்துக்குடி, காஞ்சிபுரம், ராமநாதபுரம், கடலூர் மாவட்டங்களில் அதிகளவில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. தூத்துக்குடியில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு உப்பு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு சராசரியாக ஆண்டுக்கு 3 லட்சம் டன் உப்பு ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்த ஏற்றுமதி படிப்படியாக குறைந்து உள்ளது. கடந்த நிதியாண்டில் 1.56 ஆயிரம் டன் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உப்பு குறைவாக இருக்க காரணம் என்ன?
உலகின் நீண்ட கடற்கரை பகுதியை கொண்ட தமிழ்நாட்டில் உப்பு உற்பத்தி குறைவாக இருக்க, குஜராத்தில் உள்ளது போல தொழில்நுட்பங்கள் இங்கு இல்லை. அதற்கு ஏற்றவாறு நாம் மாற வேண்டும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவில் உப்பு முதலில் பாறைகளில் இருந்து எடுக்கப்பட்டது. எனவே உப்பு தயாரிக்கும் தொழில் சுரங்கத் தொழிலாகாகதான் இன்று வரை கருதப்பட்டு வருகிறது. அதை விவசாயத் தொழிலாக அறிவிக்க வேண்டும் எனவும் நீண்ட காலமாக கோரிக்கை எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது. விவசாயத் தொழிலாக அறிவிக்கப்பட்டால், இத்தொழிலுக்கு மேலும் சலுகைகள் அதிகரித்து உப்பின் விலை குறையும், புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த முடியும் எனவும் கூறுகிறார்கள்.
India’s salt production likely to reduce by 30%, Price May Increase
India’s salt production likely to reduce by 30%, Price May Increase | உப்பு உற்பத்தி 30% சரிவு.. விலை அதிகரிக்குமா?