உக்ரைன் ரஷ்ய சண்டையால் வேலையிழந்தவர்களின் எண்ணிக்கை 5 மில்லியன்

உக்ரைன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பால் எண்ணற்ற பிரச்சனைகளும், உயிரிழப்பும் தொடர்ந்து வரும் நிலையில், மற்றொரு முக்கியமான செய்தி வெளியாகி கவலைகளை அதிகரித்துள்ளது. 

ரஷ்யா போர் தொடங்கிய பின்னர், இதுவரை 50 லட்சம் பேர் வேலைகளை இழந்துள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்ப்பு ILO (International Labour Organization) கூறுகிறது.

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பால் தூண்டப்பட்ட மனிதாபிமான நெருக்கடிக்கு மத்தியில், நாட்டிலும் அண்டை நாடுகளிலும் தொழிலாளர் சந்தைகள் சீர்குலைந்து வருவது கவலையளிக்கிறது. 

ரஷ்ய இராணுவம் இந்த போரை மேலும் தொடர்ந்தால் வேலை இழப்பவர்களின் எண்ணிக்கை 70 லட்சம் என்ற உச்சத்தை எட்டும் என்றும் இந்த கணிப்பு தெரிவிக்கிறது.

இரு நாடுகளுக்கும் இடையிலான சண்டை உடனடியாக நிறுத்தினால், 3.4 மில்லியன் வேலைகள் திரும்பவும் விரைவான மீட்பு சாத்தியமாகும். இது வேலை இழப்புகளை 8.9 சதவீதமாகக் குறைக்கும்.

ரஷ்ய ஆக்கிரமிப்பால் உக்ரைன் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 24 அன்று தொடங்கிய போரினால் சுமார் ஐம்பத்தி நான்கு லட்சம் மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக சென்று விட்டன.

பெண்கள், குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிக அளவில் அகதிகளாக மாறிவிட்ட சூழ்நிலையில், உக்ரைனில் நிலவும் போர்ச்சூழலால் வேலைவாய்ப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. 

உக்ரைனில் இருந்து அகதியாக சென்றவர்களில் சுமார் 27 லட்சம் பெர் மில்லியன் பேர் வேலை செய்யும் வயதை சேர்ந்தவர்கள். இவர்களில், தோராயமாக 1.2 மில்லியன் பேர் வேலையை இழந்துள்ளனர் அல்லது வெளியேறியுள்ளனர்.

இந்த சிக்கலை தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள உக்ரைன் அரசாங்கம், டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம், தேசிய சமூகப் பாதுகாப்பு அமைப்பைச் செயல்பட வைக்க கணிசமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

மேலும் படிக்க | உக்ரைன் போரின் தாக்கத்தை உணர்த்தும் மனம் பதற வைக்கும் காட்சிகள்

உக்ரைன் போரினால், அதன் அண்டைநாடுகளான ஹங்கேரி, மால்டோவா, போலந்து, ருமேனியா மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளிலும் தொழிலாளர்களுக்கு சிக்கல் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

போர் நீண்டகாலம் தொடர்ந்தால்,  உக்ரேனிய அகதிகள் நீண்ட காலம் வெளிநாடுகளில் இருக்க வேண்டியிருக்கும். இதனால், அண்டை நாடுககளில் உள்ள தொழிலாளர் சந்தை மற்றும் சமூக பாதுகாப்புக்கும் அழுத்தம் அதிகரிக்கும். 

உக்ரைனில் மட்டுமல்ல, இந்தப் போர், ரஷ்ய கூட்டமைப்பையும், மத்திய ஆசியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.  

உக்ரைனின் ஆக்கிரமிப்பு உலகப் பொருளாதாரத்திற்கு ஒரு அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. அதிலும் குறிப்பாக, COVID-19 ஏற்படுத்திய மாபெரும் நெருக்கடியிலிருந்து மீள்வதை மேலும் சிக்கலாக்கியுள்ளது.  

மேலும் படிக்க |  ரஷ்யா போரில் டால்பின்களை களம் இறக்கியுள்ளதா; அமெரிக்கா வெளியிட்டுள்ள பகீர் தகவல்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.