எல்ஐசி ஐபிஓ-வில் உங்களுக்கு பங்கு ஒதுக்கப்பட்டதா? ஆன்லைனில் செக் செய்வது எப்படி?

இந்தியாவின் மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, மே 4-ம் தேதி ஐபிஓ மூலம் பங்குகளை வெளியிட்ட நிலையில், மே 12-ம் தேதி பங்குகளை ஒதுக்கீடு செய்ய உள்ளதாக அறிவித்து இருந்தது.

எல்ஐசி பங்குகள் ஐபிஓவில் 2.95 மடங்கு அதிகமாக வாங்கப்பட்டுள்ளது. எனவே யாருக்கெலாம் பங்குகள் ஒதுக்கீடு செய்யப்படும் என ஆர்வமாக முதலீட்டாளர்கள் எதிர்நோக்கி இருக்கிறார்கள். எனவே எல்ஐசி ஐபிஓவில் உங்களுக்கு பங்குகள் ஒதுக்கப்பட்டதா என்பதை ஆன்லைனில் செக் செய்வது எப்படி என விளக்கமாக பார்க்கலாம்.

எல்ஐசி ஐபிஓ முதலீட்டாளர்கள் சோகம்.. கிரே மார்கெட்டில் ப்ரீமியம் விலை 90% சரிவு..!

மும்பை பங்குச்சந்தை இணையதளம்

மும்பை பங்குச்சந்தை இணையதளம்

மும்பை பங்குச்சந்தையில் இணயதளத்தில் உள்ள https://www.bseindia.com/investors/appli_check.aspx என்ற இணைப்பிற்கு சென்று ஈக்விட்டி என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

எல்ஐசி

எல்ஐசி

பின்னர் லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் ஆஃப் இந்தியா என்பதை தேர்வு செய்து, உங்களது ஐபிஓ விண்ணப்ப எண் அல்லது பான் எண்ணை உள்ளிட வேண்டும். தொடர்ந்து நான் ரோபாட் இல்லை என்பதை தேர்வு செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

கெவின் டெக்னாலஜிஸ் இணையதளம்

கெவின் டெக்னாலஜிஸ் இணையதளம்

மும்பை பங்குச்சந்தை பதிவாளர் கெவின் டெக்னாலஜிஸ் இணையதளம் மூலமாகவும் ஐபிஓவில் பங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதா என பார்க்க முடியும். அதற்கு https://kcas.kfintech.com/ipostatus என்ற இணைப்பிற்கு செல்ல வேண்டும்.

தேவையான விவரங்கள்
 

தேவையான விவரங்கள்

மேலே அளித்துள்ள இணைப்பிற்கு சென்று ஐபிஓ விண்ணப்ப எண், கிளைன்ட் ஐடி அல்லது பாண் எண்ணை உள்ளிட்டு பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதா என சரிபார்க்க முடியும்.

எல்ஐசி ஐபிஓ

எல்ஐசி ஐபிஓ

இந்தியாவின் மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி, 21,008.48 கோடி ரூபாய் மதிப்பிலான நாட்டின் மிகப் பெரிய பொதுப் பங்கு வெளியீட்டை நடத்தியது.

ஆர்வம் காட்டாத அனுபவ முதலீட்டாளர்கள்

ஆர்வம் காட்டாத அனுபவ முதலீட்டாளர்கள்

மே 4-ம் தேதி தொடங்கப்பட்ட எல்ஐசி ஐபிஓ பங்கு வெளியீடு, மே 9-ம் தேதி வரை நடைபெற்றது. முதல் நாள் முதல் ஐபிஓ மூலம் எல்ஐசி பங்குகளை அதன் பாலிசிதாரர்கள் அதிகளவில் வாங்கிக் குவித்தனர். ஆனால் தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள், அனுபவம் வாய்ந்த ரீடெயில் முதலீட்டாளர்கள் பெரும் அளவில் கவனம் செலுத்தாமல் இருந்தனர்.

 மொத்த பங்குகள் விற்பனை

மொத்த பங்குகள் விற்பனை

ஐபிஓ மூலம் மொத்தமாக எல்.ஐ.சியின் 16.2 கோடி பங்குகள் விற்க முடிவு செய்யப்பட்டது. கடைசி நாள் முடிவில் 2.95 மடங்கு அதிகமாக விற்பனையாகி மொத்தமாக 47.83 பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்கி இருந்தார்கள். அதில் யாருக்கெல்லாம் பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது இன்று தெரியவரும்.

எல்ஐசி ஐபிஓ-வின் பிற முக்கிய தேதிகள்

எல்ஐசி ஐபிஓ-வின் பிற முக்கிய தேதிகள்

எல்ஐசி ஐபிஓ-வில் பங்குகள் கிடைக்காதவர்களின் பணம் மே 13-ம் தேதி ரீஃபண்ட் செய்யப்படும். மே 16-ம் தேதி டீமேட் கணக்கில் பங்குகள் வரவு வைக்கப்படும். மே 17-ம் தேதி பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

LIC IPO Share Allotment Day: How To Check Share Allotment Status In Online?

LIC IPO Share Allotment Day: How To Check Share Allotment Status In Online? | எல்ஐசி ஐபிஓ-வில் உங்களுக்கு பங்கு ஒதுக்கப்பட்டதா? ஆன்லைனில் செக் செய்வது எப்படி?

Story first published: Thursday, May 12, 2022, 12:16 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.