8 வர்த்தக நாட்களில் மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 4 ஆயிரம் புள்ளிகளுக்கு மேலும், தேசியப் பங்குச் சந்தையின் நிஃப்டி ஆயிரத்து 200 புள்ளிகளுக்கு மேலும் வீழ்ச்சி கண்டுள்ளன.
இன்று காலை 10 மணி வாக்கில், மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 930 புள்ளிகள் சரிந்து 53 ஆயிரத்து 158 புள்ளிகளில் வர்த்தகமானது. தேசியப் பங்குச் சந்தையின் நிஃப்டி 295 புள்ளிகள் குறைந்து 15 ஆயிரத்து 871 புள்ளிகளில் வணிகமானது. இன்றைய வர்த்தகத்தில், ஆட்டோ, வங்கி, உலோகம், மின்சாரம், கட்டுமானம் உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த பங்குகள் 2 சதவிகிதத்திற்கும் மேல் குறைந்துள்ளன.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்க மைய வங்கி மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி கடன்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியதும், உக்ரைன் – ரஷ்யா போர் நீடிப்பது போன்ற காரணங்களால் பங்குச் சந்தைகள் தொடர் சரிவில் இருப்பதாக கூறப்படுகிறது. அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 30 காசுகள் வீழ்ச்சியடைந்து 77 ரூபாய் 55 காசுகளானது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM