அவதார் 2ம் பாகத்தில் தண்ணீர் ராஜ்யம்

13 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி உலகையே திரும்பிப் பார்க்க வைத்த படம் அவதார். 1500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் அதை விட 20 மடங்கு அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. இந்த சாதனையை இதுவரை வேறு எந்த படமும் முறியடிக்கவில்லை.

சயின்ஸ் பிக்சன் படமான இதில் கிரகங்களுக்கு இடையில் நடக்கும் சண்டை தான் கதை என்றாலும் இந்த உலகில் வாழும் பேராசை பிடித்த மனிதனுக்கும் இயற்கையோடு இணைந்து வாழும் மற்றொரு கிரக மனிதர்களுக்கும் இடையிலான மோதலை சொன்ன விதத்தில் அனைவரையும் கவர்ந்தது.

இந்தப்படம் தயாரானபோது இதன் இரண்டாம் பாகத்திற்கான எந்த யோசனையும் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் வசம் இல்லை. ஆனால் படத்தின் மிகப்பெரிய வெற்றி இரண்டாம் பாகத்தை உருவாக்க வைத்தது. அதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து ஐந்து பாகங்கள் வெளியிட இருப்பதாக ஜேம்ஸ் கேமரூன் அறிவித்திருக்கிறார்.

இதன் இரண்டாம் பாகமான 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' வருகிற டிசம்பர் மாதம் 16ம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் இதன் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. முதல் பாகத்தை மிஞ்சும் அளவிற்கு தொழில்நுட்ப நேர்த்தி, ஆச்சரியம் நிறைந்திருக்கிறது.

டீஸரில் வெளியாகியுள்ள காட்சிகளின் அடிப்படையில், உலகிலிருந்து படையெடுத்துச் சென்ற மனிதர்கள் பலர் நவிகிரகத்தில் அங்குள்ள மனிதர்களை போல மாறி நவியை கைப்பற்ற போராடுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் கிரகத்தின் மேற்பரப்பை இழந்துவிட்ட நவிகள் தண்ணீருக்கு அடியில் இருந்து தங்கள் போராட்டத்தை நடத்துவது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது.
எனவே இதில் அண்டர் வாட்டர் எனப்படும் காட்சிகள் அதிக அளவில் இருக்கும் என்று தெரிகிறது. இந்த படம் 160 மொழிகளில் வெளியாகிறது. படத்தின் மூன்றாவது பாகம் 2024ம் ஆண்டு வெளிவருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.