6 மாதத்தில் 1700% லாபம் கொடுத்த ஸ்மால் கேப் பங்கு.. நீங்க வாங்கி வைத்திருக்கீங்களா?

உக்ரைன் – ரஷ்யா இடையேயான பதற்றத்தின் மத்தியில் சர்வதேச அளவில் பங்கு சந்தைகள் சரிவினைக் கண்டு வருகின்றன.

எனினும் இந்த நெருக்கடியான காலகட்டத்திலும் செசல் கிளாஸ் (Sezal Glass) பங்கானது நல்ல லாபம் கொடுத்த பங்குகளில் ஒன்றாக இருந்துள்ளது.

இது எவ்வளவு ஏற்றம் கண்டுள்ளது? ஒரு வருட நிலவரம் என்ன? இன்றைய பங்கு நிலவரம் என்ன வாருங்கள் பார்க்கலாம்.

உக்ரைனின் முடிவு கைகொடுக்குமா.. செய்வதறியாது திகைக்கும் ரஷ்யா.. எரிபொருள் விலை என்னவாகுமோ?

 850% ஏற்றம்

850% ஏற்றம்

கடந்த ஒரு மாதங்களாக சந்தையில் செல் ஆஃப் செய்து வரப்படும் நிலையில், இந்த எஸ் எஸ் இ பங்கானது, 399 ரூபாயில் இருந்து 245 ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் மட்டும் இப்பங்கின் விலையானது 40% சரிவினைக் கண்டுள்ளது. எப்படியிருப்பினும் 2022ம் ஆண்டில் இப்பங்கின் விலையானது 25.50 ரூபாயில் இருந்து, 244.90 ரூபாய் என்ற லெவலுக்கு அதிகரித்துள்ளது. இது கிட்டதட்ட 850 சதவீதம அதிகரித்துள்ளது.

 மல்டிபேக்கர் பங்கு

மல்டிபேக்கர் பங்கு

இதே கடந்த 6 மாதத்தில் இந்த மல்டிபேக்கர் பங்கு விலையானது 13.65 ரூபாயில் இருந்து, 244.90 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் பங்குதாரர்களுக்கு 1700 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது. இந்த பங்கின் சந்தை மூலதனம் 250 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

 இன்டெக்ஸ்கள் சரிவு
 

இன்டெக்ஸ்கள் சரிவு

இந்த 6 மாத காலகட்டத்தில் நிஃப்டி லாபம் எதுவும் கொடுக்கவில்லை. மாறாக 10.70% சரிவினைக் கண்டுள்ளது. இதே காலகட்டத்தில் சென்செக்ஸ் 10.85 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே பி எஸ் இ சென்செக்ஸ் ஸ்மால் கேப் இன்டெஸ் ஆனது 12.75 சதவீதம் சரிவினைக் கண்டுள்ளது. இதே கடந்த 6 மாத காலகட்டத்தில் மிட் கேப் குறியீடானது 16 சதவீத்திற்கும் அதிகமாக சரிவினையே கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 இன்றைய பங்கு நிலவரம்?

இன்றைய பங்கு நிலவரம்?

செசல் கிளாஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது இன்று கிட்டதட்ட 1% அதிகரித்து, என் எஸ் இ-யில் 245 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இப்பங்கின் 52 வார உச்ச விலை 517.45 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 13.65 ரூபாயாகும். இதன் இன்றைய உச்ச விலை 255.35 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 231.05 ரூபாயாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Shares of Sezal Glass have returned 1700% in 6 months

Sezal Glass one of the small cap stock, it rose to Rs 244.90 from Rs 13.65. It has made a profit of about 1700 percent in the last six months.

Story first published: Thursday, May 12, 2022, 19:04 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.