அஞ்சலகத்தின் இந்த திட்டத்தில் ரூ.35 லட்சம் வரை வருமானம்.. எவ்வளவு முதலீடு செய்யணும்?

இந்தியாவில் மக்கள் விரும்பும் சிறு சேமிப்பு திட்டங்களல் அதிக இடம் பிடிப்பது அஞ்சலக திட்டங்கள் தான். இது அரசின் ஆதரவால் செயல்படும் ஒரு அமைப்பாகவும் இருந்து வருகின்றது. இதன் காரணமாக நம்பிக்கையானதாகவும், பாதுகாப்பானதாகவும் பார்க்கப்படுகிறது.

எல்லாவற்றிற்கு மேலாக அஞ்சலக திட்டங்களில் சந்தை அபாயம் என்பது இல்லை. நிலையான வருமானம் தரும் திட்டங்களாகவும் உள்ளது.

ஒரே நாளில் ரூ.5 லட்சம் கோடி காலி.. சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!

அஞ்சலகத்தின் சிறுசேமிப்பு திட்டங்கள் மட்டும் அல்ல, இன்சூரன்ஸ் திட்டங்களும் மிக பிரபலமான ஒன்றாக பார்க்கப்படுகின்றது.

ரூ.35 லட்சம் எப்படி?

ரூ.35 லட்சம் எப்படி?

அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருக்கும் திட்டம் கிராம சுரக்ஷா. இது நிறைவான லாபம் தரும் ஒரு திட்டமாகவும் பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தில் நீங்கள் மாதம் 1411 ரூபாய் முதலீடு செய்தால், முதிர்வு காலத்தில் சுமார் 35 லட்சம் ரூபாய் முதிர்வு தொகையாக கிடைக்கும்.

எவ்வளவு வரை முதலீடு?

எவ்வளவு வரை முதலீடு?

இது ஒரு முழு ஆயுள் காப்பீட்டு திட்டமாகும். இந்த பாலிசியினை எடுத்து 5 ஆண்டுகள் முடிவில் எண்டோமென்ட் அஷ்யூரன்ஸ் திட்டமாகவும் மாற்றிக் கொள்ள கூடிய அம்சம் உள்ளது.

இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 19 வயது, அதிகபட்ச வயது 55 வயது ஆகும். குறைந்தபட்ச காப்பீட்டு தொகை 10,000 ரூபாயாகும். இதே அதிகபட்சம் காப்பீட்டு தொகை 10 லட்சம் ரூபாயாகும்.

 

பிரீமியம் எப்படி கட்டலாம்?
 

பிரீமியம் எப்படி கட்டலாம்?

இந்த அஞ்சலக பாலிசிக்கு, மற்ற இன்சூரன்ஸ் பாலிசிகளுக்கு போலவே மாத மாதமோ அல்லது காலாண்டுக்கு ஒரு முறையோ அல்லது ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ, வருடத்திற்கு ஒரு முறையோ இன்சூரன்ஸ் பிரீமியத்தினை கட்டிக் கொள்ளலாம்.

எவ்வளவு பிரீமியம் செலுத்தணும்?

எவ்வளவு பிரீமியம் செலுத்தணும்?

முதலீட்டாளர்19 வயதில் 10 லட்சம் தொகைக்கான கிராம சுரக்ஷா காப்பீட்டை வாங்கினால், 55 வருடங்களுக்கான மாதாந்திர பிரீமியம் 1515 ரூபாயாக இருக்கும்.

இதே 58 வருடங்களுக்கு எனில் 1463 ரூபாயாக இருக்கும்.

அதுவே, 60 வருடங்களுக்கு 1141 ரூபாயாக இருக்கும்.

முதிர்வு எவ்வளவு கிடைக்கும்?

இந்த திட்டத்தில் 55 ஆண்டுகள் திட்டத்திற்கு முதிர்வுத் தொகை 31.60 லட்சம் ரூபாயாக இருக்கும்.

இதே 58 வருட திட்டத்தில் முதிர்வு தொகை 33.40 லட்சம் ரூபாயாக இருக்கும்.

இதே 60 ஆண்டுகளுக்கு முதிர்வு தொகை 34.60 லட்சம் ரூபாயாக இருக்கும்.
சிறப்பம்சங்கள்

இந்த திட்டத்தினை தொடங்கி 4 ஆண்டுகளுக்கு பிறகு உங்களுக்கு கடன் கிடைக்கும். 5 வருடங்களுக்கு முன்னதாக பாலிசியை சரண்டர் செய்தால் போனஸ் கிடைக்காது. இந்தத் திட்டத்தில் தனிநபருக்கு பிரீமியம் செலுத்தும் சில விருப்பங்கள் உண்டு. அவை 55 ஆண்டுகள், 58 ஆண்டுகள் மற்றும் 60 ஆண்டுகள் ஆகும். ஆக அதற்கேற்ப உங்கள் முதிர்வு தொகையில் மாறுபாடு இருக்கும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

how to get rs.35 lakh in this post office scheme?check here full details

If you invest Rs.1411 per month in the Post Office’s Gram Suraksha Insurance Scheme, you will get a maturity of about nearly Rs.35 lakh

Story first published: Thursday, May 12, 2022, 21:15 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.