‘ஆம்பூர் பிரியாணி திருவிழா 2022’ ல் பீப் பிரியாணிக்கு தடை விதித்த மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வஹா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு மாநில எஸ்.சி./எஸ்.டி. ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆம்பூர் வர்த்தக மையத்தில் மே மாதம் 13 முதல் 15 வரை மூன்று நாட்கள் நடைபெறுவதாக இருந்த இந்த பிரியாணி திருவிழா கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
என்னாது பீப் பிரியாணிக்கு தடையா….?
The Name is MK.Stalin pic.twitter.com/GnZP6L34Ag
— தமிழன்பிரசன்னா Prasanna Sundaram @ TamilanPrasanna (@PrasannaTamilan) May 12, 2022
இருந்த போதும், 20 க்கும் மேற்பட்ட பிரியாணி வகைகள் இடம்பெறும் இந்த பிரியாணி திருவிழாவில் பீப் பிரியாணிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக, எஸ்.சி./எஸ்.டி. ஆணைய உறுப்பினர் செயலாளர் அனுப்பியிருக்கும் உத்தரவில், “பீப் பிரியாணிக்கு தடை விதித்திருப்பது சிறுபான்மையினர் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான நடவடிக்கை என்றும், இது தொடர்பாக ஏன் உங்கள் மீது தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கக் கூடாது” என்று கேள்வி எழுப்பி மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.