ரிவர்ஸ் மோடில் இயங்கிய ஓலா பைக்! விபத்து ஏற்பட்டு 65 வயது முதியவர் படுகாயம்!

Ola S1 Pro மின்சார ஸ்கூட்டர் ரிவர்ஸ் மோடில் இயங்கியதால் விபத்து ஏற்பட்டு 65 வயது முதியவர் படுகாயமடைந்துளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்தவர் பல்லவ் மகேஸ்வரி. இவரது 65 வயதான தந்தை வீட்டிற்கு வெளியே இருந்த ஓலா எஸ்1 ப்ரோ பைக்கை வீட்டிற்குள் நிறுத்த முயற்சித்துள்ளார். முழு வேகத்தில் முன்னோக்கி அவர் ஆக்ஸிலேட்டரை அழுத்த, திடீரென ரிவர்ஸ் மோடில் பைக் இயங்கியதால் அதிர்ச்சி அடைத்தார். அவர் சுதாரிப்பதற்குள் முழு வேகத்தில் பின்னோக்கிச் சென்ற பைக் சுவரில் மோதியதில் அவர் படுகாயமடைந்தார்.
அவரது தலை மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டதை அடுத்து, அடைந்த சம்பவத்தை அவருக்கு 10 தையல்கள் போடப்பட்டுள்ளன. மேலும் அவரது உடைந்த இடது கையில் இரண்டு ப்ளேட்கள் செருகப்பட்டன. “தனது 65 வயதிலும் மிகவும் சுறுசுறுப்பாகவும், ஓலா மின்சார வாகனத்தைப் பயன்படுத்துவதில் ஆர்வமுள்ளவராகவும் இருந்தார்” என குறிப்பிட்டு பல்லவ் மகேஸ்வரி எழுதியுள்ளார்.
No alternative text description for this image

இந்த விபத்து, கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட மின்சார ஸ்கூட்டரின் பயனரின் பாதுகாப்பை மீண்டும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. சில ஓலா பயனர்கள் சாலையின் நடுவில் சென்று கொண்டிருக்கும்போது, ஓலா பைக் தானாகவே ரிவர்ஸ் மோடுக்கு மாறியதாக குற்றம்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.