இலங்கையில் புதிய அமைச்சரவை? தமிழர்களுக்கு வாய்ப்பு?

கொழும்பு,
இலங்கை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்கவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இன்று புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாளை அமைச்சரவை நியமனம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
இதனிடையே, ராஜபக்சே  இருக்கும் ஆட்சியில் எந்த பதவியும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் பொன்சேகா தெரிவித்துள்ளார். 
இந்நிலையில், தமிழ், இஸ்லாமிய அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அமைச்சரவையில் இடமளிக்க ரணில் விக்கிரமசிங்கே முடிவு செய்துள்ளதாகவும், அதற்காக சம்பந்தப்பட்டவர்களிடம் தொலைபேசியில் பேசி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.   

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.