நாட்டு நடப்புகளை அரசியல்வாதிகளின் பேச்சுகளுக்கு எதிர்வினையாற்ற விரும்புபவர்கள் பலரும் சமூக ஊடகங்களில் கிண்டலாக சாட்டையால் அடிப்பது போல அரசியல் மீம்ஸ்கள் போட்டு வெளுத்து வாங்குகிறார்கள்.
இன்று சமூக ஊடகங்களில் வைரலான அரசியல் மீம்களைப் பார்ப்போம். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படத்தின் முதல் பாடல் நேற்று வெளியானது. கமல்ஹாசன் எழுதி பாடியுள்ள இந்த பாடலில், அரசியல் நெடி ரொம்ப தூக்கலாகவே உள்ளது. அதிலும், “ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்லே இப்பாலே, சாவி இப திருடன் கையில தில்லாலே தில்லாலே” என்ற வரிகள் நேரடியாக மத்திய அரசை சாடுவதாக உணர்ந்த பாஜகவினர், அந்த பாடலை நீக்க வேண்டும் என்று சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளனர்.
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச? என்ற ட்விட்டர் பயனர் இதைக் குறிப்பிட்டு, கமல் சொல்வதாக “நரி ஊளை விட்டுருச்சு, படம் சக்சஸ்” என்று மீம்ஸ் போட்டுள்ளனர்.
இது போன்ற அரசியல் மீம்ஸ்களை இங்கே தொகுத்து தருகிறோம்.
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், Kasi காசி என்ற ட்விட்டர் பயனர் “…சித்தப்பாவை விட்டு விட்டாரய்யா” என்று கலாய்த்து மீம் போட்டுள்ளார்.
பிரியாணிக்கு பெயர்பெற்ற ஆம்பூரில் 3 நாள் பிரியாணி திருவிழா நடக்க இருந்த நிலையில், பீப் (மாட்டுகறி) பிரியாணி – பன்றிக்கறி பிரியாணி என்று சர்ச்சையாக, மாவட்ட நிர்வாகம் பீப் பிரியாணிக்கு தடை விதித்தாக செய்திகள் வெளியானது. இதற்கு எதிர்ப்புகள் கிளம்ப ஒரு கட்டத்தில் மழைகாரணமாக பிரியாணி திருவிழாவை மாவட்ட நிர்வாகம் தள்ளி வைத்தது.
இதனைத் தொடர்ந்து, பீப் பிரியாணிக்கு தடை விதித்த விவகாரத்தில் தமிழ்நாடு எஸ்சி, எஸ்டி ஆணையம் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதைக் குறிப்பிட்டு, நீலகண்டன் என்ற ட்விட்டர் பயனர், “தட் பீடா வாயன் விளக்கம் தருவார் என நம்புகிறேன். பீஃப் பிரியாணிக்கு தடையாடி பொடுற? என்று கம்மெண்ட் செய்துள்ளார்.
திருப்பூர் மாநகராட்சி சார்பில் ஒட்டப்பட்ட ஒரு ஃபிளக்ஸ் சுவரொட்டியில், “எச்சரிக்கை இங்கு குப்பை கொட்டாதீர்கள், மீறினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும், கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு கீழே இந்தி எழுத்துகள் இடம்பெற்றிருந்ததால், கொதித்துப்போன தமிழார்வலர்கள் அந்த சுவரொட்டியை கிழித்துள்ளனர். இதைக் குறிப்பிட்டு, நாய்க்குட்டி என்ற பயனர், “ஹிந்திய கூட சேத்தின னால மொத்தமா கிழிச்சிடாங்க… சம்பவம்..” என்று ஃபயர் விட்டிருக்கிறார்.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுவதால், அந்நாட்டு மக்கள் இலங்கை அரசுக்கு எதிராகப் போராடி வருகின்றனர். மக்கள் கிளர்ச்சி வன்முறைகளும் நடந்து வருகிறது. மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து, இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுள்ளார். இதைக் குறிப்பிட்டு, வடிவேலு குரலில், ஹலோ ரணில் சார்ஹா, கேஸ் எப்ப சார் கிடைக்கும்? என்று கலாய்த்து மீம் போட்டுள்ளனர்.
கிரண்பேடி சினிமா வீடியோவை ட்வீட் செய்ய நெட்டிசன்கள் வரிந்துகட்டிக்கொண்டு ட்ரோல் செய்தனர். அதைக் குறிப்பிட்டு, ஒரு ட்விட்டர் பயனர், “ரொம்ப பாவம்யா.. யாரு… ஹெலிகாப்டரில் வந்தவுங்களா? இந்த சினிமா வீடியோவை உண்மை என்று நம்பி இந்த ட்வீட்டை போட்ட கிரண்பேடியை சொல்றேன்.” என்று ட்வீட் செய்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“