அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மே 12-ம் தேதி வரலாறு காணாத விதமாகச் சரிந்து 77 ரூபாய் 59 காசுகளாக வர்த்தகம் செய்யப்பட்ட வந்தது. எனவே சென்ற ஆண்டு இதே நேரம் உலகின் டாப் 10 கரன்சிகளுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு எப்படி இருந்தது என்பதை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
மீண்டும் அதல பாதாளம் நோக்கி செல்லும் ரூபாய்..ஏன்.. 3 முக்கிய காரணங்கள் இதோ!
இந்திய ரூபாய் vs கனடியன் டாலர்
2021-ம் ஆண்டு கனடியன் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 60 ரூபாய் 62 காசுகளாக இருந்தது. 2022, மே 12-ம் தேதி இந்திய ரூபாய் மதிப்பு 59.56 ரூபாயாக அதிகரித்துள்ளது.
இந்திய ரூபாய் vs ஸ்விஸ் ஃப்ராங்க்
2021-ம் ஆண்டு ஸ்விஸ் ஃப்ராங்க் நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 80 ரூபாய் 91 காசுகளாக இருந்தது. 2022, மே 12-ம் தேதி 77 ரூபாய் 90 காசுகளாக ரூபாய் மதிப்பு அதிகரித்துள்ளது.
இந்திய ரூபாய் vs சீனா யுவான்
2021-ம் ஆண்டு மே மாதம் சீனா யுவானுக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 11 ரூபாய் 39 காசுகளாக இருந்தது. 2022, மே 12-ம் தேதி 0.61 சதவீதம் இந்திய ரூபாய் மதிப்பு சரிந்து 11 ரூபாய் 46 காசுகளாக உள்ளது.
இந்திய ரூபாய் vs ஹாங் காங் டாலர்
2021-ம் ஆண்டு மே 12-ம் தேதி ஹாங் காங் டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 9 ரூபாய் 47 காசுகளாக இருந்தது. 2022, மே 12-ம் தேதி 9 ரூபாய் 89 காசுகள் என 4.44 சதவீத இந்திய ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது.
இந்திய ரூபாய் vs நியூசிலாந்து டாலர்
2021-ம் ஆண்டு மே 12-ம் தேதி நியூசிலாந்து டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 42 ரூபாய் 69 காசுகளாக இருந்தது. 2022, மே 12-ம் தேதி 8.14 சதவீதம் இந்திய ரூபாய் மதிப்பு அதிகரித்து 48 ரூபாய் 40 பைசாவாக உள்ளது.
Here’s how Indian Rupee has performed against the top 10 currencies in the last year
Here’s how Indian Rupee has performed against the top 10 currencies in the last year | சென்ற ஆண்டு உலகின் டாப் 10 கரன்சிகளுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு எப்படி இருந்தது?