எல்ஐசி ஐபிஓ-வில் உங்களுக்கு பங்குகள் கிடைக்கவில்லையா? கவலை வேண்டாம்.. இதை பாருங்க!

இந்தியாவின் பங்குச்சந்தை வரலாற்றில் மிகப் பெரிய ஐபிஓவாக எல்ஐசி ஐபிஓ என்ற வாரம் பங்குகளை வெளியிட்டது. மே 4-ம் தேதி முதல் 9 தேதி வரை 2.95 மடங்கு அதிகமாக எல்ஐசி பங்குகள் ஐபிஓவில் வாங்கப்பட்டு இருந்தது.

மீண்டும் அதல பாதாளம் நோக்கி செல்லும் ரூபாய்..ஏன்.. 3 முக்கிய காரணங்கள் இதோ!

மே 12-ம் தேதி எல்ஐசி ஐபிஓ பங்குகள் முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் பலருக்குப் பங்குகள் ஒதுக்கப்படாமல் போயிருக்கலாம். எனவே அவர்கள் கவலைப்பட வேண்டாம். அடுத்த வர இருக்கும் 4 நிறுவன ஐபிஓ பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

 இக்ஸிகோ ஐபிஓ

இக்ஸிகோ ஐபிஓ

ஆன்லைன் டிராவல் அக்ரிகேட்டர் நிறுவனமான இக்ஸிகோ, விரைவில் ஐபிஓ மூலம் 1,600 ரூபாய் முதலீட்டைத் திரட்ட உள்ளது. அதற்கான அனுமதியைச் செபி வழங்கியுள்ளது.

உட்கர்ஷ் ஸ்மால் ஃபினான்ஸ் வங்கி ஐபிஓ

உட்கர்ஷ் ஸ்மால் ஃபினான்ஸ் வங்கி ஐபிஓ

உட்கர்ஷ் ஸ்மால் ஃபினான்ஸ் வங்கி ஐபிஓ மூலம் 1,350 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வெளியிட உள்ளது. 750 கோடி ரூபா மதிப்பிலான பங்குகள் புதிய பங்குகளாகவும் 600 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை ஆஃபர் விலையிலும் உட்கர்ஷ் ஸ்மால் ஃபினான்ஸ் வங்கி வெளியிடுகிறது.

வீனஸ் பைப்ஸ் & டியூப்ஸ் ஐபிஓ
 

வீனஸ் பைப்ஸ் & டியூப்ஸ் ஐபிஓ

வீனஸ் பைப்ஸ் & டியூப்ஸ் ஐபிஓ மே 13-ம் தேதியுடன் முடிவடைகிறது. பங்குகளை 310 ரூபாய் முதல் 316 ரூபாய் வரையில் வாங்க முடியும்.

டெல்லிவரி ஐபிஓ

டெல்லிவரி ஐபிஓ

சப்ளை செயின் நிறுவனம் டெல்லிவரி இன்று முதல் மூன்று நாட்களுக்கு ஐபிஓ மூலம் பங்குகளை விற்று 5,235 கோடி ரூபாய் மூலதனத்தைத் திரட்டுகிறது.

இந்தியாவின் மிகப் பெரிய எல்ஐசி ஐபிஓ இரண்டு நாட்களுக்கு முன் முடிவடைந்துள்ள நிலையில், இந்த ஆண்டின் இரண்டாவது மிகப்பெரிய டெல்லிவரி ஐபிஓ முதலீட்டாளர்களை எப்படி ஈர்க்கும் என இங்கு விளக்கமாக பார்க்கலாம்.

 

டெல்லிவரி ஐபிஓ விலை எவ்வளவு?

டெல்லிவரி ஐபிஓ விலை எவ்வளவு?

டெல்லிவரி ஐபிஓ பங்கு ஒன்றின் விலை 462 ரூபாய் முதல் 487 ரூபாய் வரையில் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் குறைந்தது 30 பங்குகள் ஒரு லாட் என வாங்க வேண்டும். தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்கு 75 சதவீத பங்குகளும், ரீடெயில் முதலீட்டாளர்களுக்கு 10 சதவீத பங்குகளும், நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்களுக்கு 15 சதவித பங்குகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஐபிஓ மூலம் 5,235 கோடி ரூபாய் மூலதனத்தைத் திரட்ட முடிவு செய்துள்ள டெல்லிவரி, 1,235 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை ஆஃபர் விலையிலும், 4,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை புதிதாகவும் வெளியிடுகிறது. மே 11-ம் தேதி தொடங்கிய டெல்லிவரி ஐபிஓ, மே 13-ம் தேதி வரை நடைபெறுகிறது. பங்குகள் மே 19-ம் தேதி அலாட் செய்யப்படும், ரீஃபண்டுகள் மே 20-ம் தேதி கிடைக்கும். டீமேட் கணக்கில் மே 23-ம் தேதி பங்குகள் வரவு வைக்கப்படும். பங்குச்சந்தையில் மே 24-ம் தேதி பட்டியலிடப்படும்.

 

 பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு

கட்டுரையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுகளின் விளைவாக ஏற்படும் இழப்புகளுக்கு கிரேனியம் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜிஸ், ஆசிரியர் பொறுப்பல்ல. Tamil.Goodreturns.in பயனர்கள் எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன் நிபுணர்களுடன் சரிபார்க்க அறிவுறுத்துகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Not Received LIC IPO Allotment? Don’t worry, you can still invest in these 4 IPOs to make possible profit

Not Received LIC IPO Allotment? Don’t worry, you can still invest in these 4 IPOs to make possible profit | எல்ஐசி ஐபிஓ-வில் உங்களுக்கு பங்குகள் கிடைக்கவில்லையா? கவலை வேண்டாம்.. இதை பாருங்க!

Story first published: Thursday, May 12, 2022, 23:35 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.