மரியுபோல்,
உக்ரைனின் மரியுபோல் நகரில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முயற்சித்து வருகின்றனர். அசோவ்ஸ்டல் இரும்பாலையைத் தவிர மொத்த மரியுபோலும் ரஷியா வசமான நிலையில், மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர்.
ரஷியாவின் அவசரகால பணியாளர்கள் இடிபாடுகளை அகற்றியும், உள்ளூர் மக்களுக்காக மரங்களை வெட்டி அப்புறப்படுத்தியும் உதவி செய்து வருகின்றனர். மரியுபோலில் போருக்கு முன்னர் சுமார் 4 லட்சம் மக்கள் வசித்து வந்த நிலையில், தற்போது அது ஒன்றரை லட்சமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.