ஐபிஎல் : மும்பை அணி அபார பந்துவீச்சு : 97 ரன்களுக்கு சுருண்டது சென்னை அணி

மும்பை,
 ஐபிஎல் 15வது சீசன் சுவாரசியமான கட்டத்தை எட்டியுள்ளது.இன்று  மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டியில் சென்னை – மும்பை அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .அதில் டாஸ் வென்ற மும்பை  அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது .அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது .

சென்னை அணியின் தொடக்க வீரர்களாக டேவான் கான்வே ,ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர் .தொடக்கத்தில் டேவான் கான்வே ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார் .பின்னர் வந்த மொயீன் அலி ரன் எதுவும் எடுக்காமலும்  ,ராபின் உத்தப்பா 1  ரன்களில்,ருதுராஜ் கெய்க்வாட்  7 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்  .
சென்னை அணியில் கேப்டன் டோனி மட்டும் நிலைத்து நின்று ஆடினார் .மறுபுறம் களமிறங்கிய வீரர்கள் மும்பை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வந்த வேகத்தில் நடையை கட்டினர் .
ஒரு சில பந்துகளை மட்டும் பவுண்டரி ,சிக்சருக்கு அனுப்பி டோனி தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் .
9 விக்கெட்டுக்களை இழந்ததால் 15 ஓவரின் கடைசி பந்தில் ஒரு ரன் எடுக்க முயற்சித்து டோனி ஓடினார் .ஆனால் அதில் ஏதிர்முனையில் இருந்த முகேஷ் சௌத்ரி ரன் அவுட்டானார் .
இறுதியில் சென்னை அணி 16 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 97 ரன்களுக்கு ஆட்டமிழந்தது .சென்னை அணியில் அதிகபட்சமாக டோனி 36 ரன்கள் எடுத்தார் .மும்பை அணியில் டேனியல் சாம்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 
இதனை தொடர்ந்து 98 ரன்கள் இலக்குடன் மும்பை அணி விளையாடுகிறது .

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.