வெள்ளை நிற வைரம் ரூ.167 கோடிக்கு ஏலம்| Dinamalar

ஜெனீவா:சுவிட்சர்லாந்தில் உள்ள உலகப்புகழ் பெற்ற, ‘கிறிஸ்டீஸ்’ ஏல நிறுவனத்தில் கோழி முட்டை அளவிலான வெள்ளை நிற வைரக்கல் 167 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.
ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில், உலகப்புகழ் பெற்ற கிறிஸ்டீஸ் ஏல நிறுவனம்உள்ளது.இங்கு, உலகின் மிக பழமையான பொருட்கள், விலை உயர்ந்த ஆபரணங்கள் ஏலம் விடப்படுவது வழக்கம்.
உலகின் பல்வேறு மூலைகளிலும் வசிக்கும் பெரும் பணக்காரர்கள் இந்த ஏலத்தில் பங்கேற்பது வழக்கம்.இந்த வகையில், ‘தி ராக்’ என அழைக்கப்படும் கோழி முட்டை அளவிலான வெள்ளை நிற 228 கேரட் வைரக்கல், நேற்று முன்தினம் ஏலம் விடப்பட்டது. மொத்தம், 61.3 கிராம் எடை உடைய இந்த வைரக்கல்லை, அடையாளம் வெளியிடாத நபர் ஒருவர், 167 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.