சிரஞ்சீவி தங்கையாக தான்யா

ஐதராபாத்: மலையாளத்தில் நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்த படம், ‘லூசிஃபர்’. தற்போது இதன் தெலுங்கு ரீமேக்கை ‘காட்பாதர்’ என்ற பெயரில் மோகன் ராஜா ரீமேக் செய்து இயக்கி வருகிறார். சிரஞ்சீவி, நயன்தாரா, பிருத்விராஜ், பிஜு மேனன், இயக்குனர் புரி  ஜெகன்நாத் நடிக்கின்றனர். தமன் இசை அமைக்கிறார். பாலிவுட் நடிகர் சல்மான்கான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். விரைவில் பிரபுதேவா நடனப் பயிற்சியில் சிரஞ்சீவி, சல்மான்கான் இணைந்து ஆடும் பாடல் காட்சி படமாக்கப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தில் சிரஞ்சீவி தங்கை வேடத்தில் தான்யா ரவிச்சந்திரன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மறைந்த நடிகர் ரவிச்சந்திரன் பேத்தியான இவர், தமிழில் ‘பலே வெள்ளையத்தேவா’, ‘பிருந்தாவனம்’, ‘கருப்பன்’, ‘மாயோன்’, ‘நெஞ்சுக்கு நீதி’ ஆகிய படங்களிலும், ‘பேப்பர் ராக்ெகட்’ என்ற வெப்தொடரிலும் நடித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.