உணவு தேடி வயல்வெளியில் நுழைந்த "மக்னா" யானை: மின்சாரம் பாய்ந்து பலி

மாரண்டஅள்ளி அருகே நெல் வயலில் உள்ள மின் விளக்கின் கேபிளில் இருந்து மின்சாரம் தாக்கி மக்னா யானை உயிரிழப்பு. வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் உள்ள மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி, தேன்கனிக்கோட்டை போன்ற வனப் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இங்குள்ள யானைகள் கோடை காலங்களில் உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்கும், விவசாய நிலங்களுக்குள் நுழைந்து வருவது வழக்கம்.
இந்நிலையில் தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அடுத்த நல்லம்பட்டி பகுதியில் நேற்று மக்னா யானை (கொம்பு இல்லாத ஆண் யானை) ஒன்று இரவு உணவு தேடி வனப்பகுதியை விட்டு விவசாய நிலங்களுக்குள் நுழைந்துள்ளது. இதையடுத்து நல்லாம்பட்டியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர், தனது விவசாய நிலத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் வயலில் வன விலங்குகள் நுழைவதை கண்காணிக்க மின் விளக்கு அமைத்துள்ளார்.
image
இதையடுத்து உணவு தேடி வந்த மக்னா யானை நேற்று இரவு நெல் வயலுக்குள் நுழைந்துள்ளது. அப்பொழுது வயலில் இருந்த மின் விளக்கிற்குச் செல்லும், மின் வயரில் இருந்து மின்சாரம் தாக்கியதில் மக்னா யானை உயிரிழந்துள்ளது. தொடர்ந்து இன்று காலை மக்னா யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்ததை அறிந்த அக்கம் பக்கத்தினர் பாலக்கோடு வனச்சரகர் செல்வத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் மக்னா யானை உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்ய மருத்துவர் வர வழைக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு பிறகு அதே இடத்தில் மக்னா யானை உடலை அடக்கம் செய்யவுள்ளனர். குறிப்பிடத்தக்கது. நுழையும் யானைகள் இதுபோன்று மின்சாரம் தாக்கி உயிரிழப்பது தொடர்கதையாக யானைகள் உயிரிழப்பை தடுப்பதற்கு வனத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.