மோசமான பொருளாதார நெருக்கடி சூழ்நிலையில் உதவிய பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நன்றி தெரிவித்து உள்ளார்.
அண்டை நாடான இலங்கையில், வரலாறு காணாத அளவில், கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் சிலிண்டர் விலை, மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு பல மடங்கு உயர்ந்துள்ளது.
இலங்கையின் இந்த நெருக்கடி நிலைமைக்கு, அதிபர்
கோத்தபய ராஜபக்சே
மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் தான் காரணம் என, எதிர்க்கட்சிகள் மற்றும் பொது மக்கள் குற்றச்சாட்டின. மேலும், ஆட்சியில் இருந்து ராஜபக்சே குடும்பம் விலக வேண்டும் என வலியுறுத்தி, அவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதை அடுத்து, பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகினார். தொடர்ந்து, இலங்கையின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று, இலங்கையின் புதிய பிரதமராக, ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றார்.
இலங்கை அதிபருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் – 17ல் விவாதம்!
இலங்கையின் பிரபலமான தலைவர்களில் ஒருவரான ரணில் விக்ரமசிங்கே, ஏற்கனவே 4 முறை பிரதமராக பதவி வகித்து உள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு இவர் பிரதமராக இருந்த போது, அப்போதைய அதிபர் சிறிசேனா இவரை பதவி நீக்கம் செய்தார். எனினும் 2 மாதங்களுக்குப்பின் மீண்டும் விக்ரமசிங்கேவை அவர் பிரதமராக நியமித்தார். 225 உறுப்பினர் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற 113 உறுப்பினர்கள் ஆதரவு வேண்டும். ஆனால் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கேவுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், மோசமான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வரும் இலங்கைக்கு உதவிய இந்தியாவிற்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும்,
இலங்கை
பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நன்றி தெரிவித்துள்ளார். மேலும், தனது பதவிக் காலத்தில் இந்தியாவுடன் நெருக்கமான நட்புறவு வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.