Kitchen Tips: ஆலிவ் எண்ணெயில் முட்டை வறுப்பது எப்படி?

முட்டையில் புரதம் நிறைந்துள்ளது, வைட்டமின் D இன் நல்ல ஆதாரம் மற்றும் கண் ஆரோக்கியத்திற்கு தேவையான லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதில் உள்ளன. எனவே முட்டை உங்கள் நாளைத் தொடங்க ஆரோக்கியமான வழிகளில் ஒன்றாகும் – அதாவது நீங்கள் அவற்றை அதிக எண்ணெயில் வறுக்காத வரை.

ஆனால் இதை சமைக்க நீங்கள் பயன்படுத்தும் எண்ணெயின் வகையை மாற்றினால் அவை மிகவும் ஆரோக்கியமாகவும், சுவையாகவும் இருக்கும்.

வெஜிடபிள் அல்லது சன்ஃபிளாபவர் எண்ணெய்களுக்குப் பதிலாக ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்துவது மிகவும் நல்லது. இது அத்தியாவசிய ஆக்ஸிஜனேற்றங்களை உங்களுக்கு வழங்கும்.

சூடாக்கும் போது ஆல்டிஹைட்ஸ் எனப்படும் நச்சு இரசாயனங்கள் உற்பத்தி செய்வதால், உணவை வறுக்க காய்கறி எண்ணெய்களைப் பயன்படுத்துவது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆனால் ஆலிவ் எண்ணெய் ஒரு தாவர எண்ணெயாக வகைப்படுத்தப்பட்டாலும், மோனோசாச்சுரேட்டட் ஆலிவ் எண்ணெயை சூடாக்குவது, மற்ற தாவர எண்ணெய்களை விட குறைவான ஆல்டிஹைடுகளை உருவாக்குகிறது என்று ஆராய்ச்சி காட்டுகிறது.

Brit+Co படி, ஆலிவ் எண்ணெய் குறைந்த ஸ்மோக் பாயிண்ட் கொண்டிருப்பதால், மிக விரைவாக வெப்பமடைவதால், சரியான வறுத்த முட்டையை சமைக்க இது உதவும். எனவே இது சிறந்த எண்ணெய் தேர்வாக இருக்கும்.

இருப்பினும் சிலர் ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கிறார்கள், ஏனெனில் எண்ணெய்’ முட்டைகளில் உறிஞ்சக்கூடிய சுவை கொண்டது. ஆனால், நீங்கள் இதை காலை உணவின் ஒரு பகுதியாக சாப்பிட்டால், ஆலிவ் எண்ணெயின் மெல்லிய சுவை உண்மையில் மற்ற சுவைகளுக்கு சரியான மாற்றாக இருக்கும்.

வெண்ணெய் பெரும்பாலும் உப்பு மற்றும் கிரீமி சுவையை விட்டுச்செல்கிறது, ஆனால் ஆலிவ் எண்ணெயின் லேசான சுவை உங்கள் காலை உணவை ரிச் மற்றும் ஆரோக்கியமானதாக மாற்றும்.

தேவையான பொருட்கள்

1 முட்டை

1 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய்

உப்பு மற்றும் மிளகு

வழிமுறைகள்

ஒரு பாத்திரத்தில் 2 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயை நடுத்தர முதல் அதிக வெப்பத்தில் சூடாக்கவும்.

ஆலிவ் எண்ணெய் சூடானதும் , கடாயில் முட்டையை உடைத்து சுமார் 2-3 நிமிடங்கள் வறுக்கவும்.

முனைகள் பொன்னிறமானதும், கடாயில் இருந்து அகற்றவும்.

உப்பு மற்றும் மிளகு தூவி அப்படியே அனுபவிக்கவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.