கோவை: தமிழ் மிகவும் பழமையான உயர்ந்த மொழி என கோவை பாரதியார் பல்கலை. மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். மாநில மொழிகள் வளர வேண்டும். ஒன்றிய அரசு மொழியை திணிக்கவில்லை; புதிய கல்விக்கொள்கை அந்தந்த மாநில மொழிகளுக்கே முக்கியத்துவம் அளிக்கிறது. இந்தியாவின் ஒவ்வொரு மொழியையும் ஊக்குவிக்கிறோம் எனவும் கூறினார்.