பூமி மீது மோத வரும் ராட்சத விண்கல்? நாசா விஞ்ஞானிகள் எச்சரிக்கை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

வாஷிங்டன்: பூமி மீது விண்ணில் சுற்றித் திரியும் ராட்சத விண்கல் ஒன்று மோத வாய்ப்புள்ளதாக நாசா விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

விண்வெளியில் சுற்றி திரியும் ராட்சத விண்கற்கள் சில பூமியின்மீது மோதி அச்சுறுத்தல் ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை செய்வது வாடிக்கை. குறிப்பாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் விஞ்ஞானிகள் கடந்த பல ஆண்டுகளாக பூமியின் அருகே கடந்து செல்லும் ராட்சத விண்கற்கள் குறித்து அவ்வப்போது எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் சூரியனின் உள்ளிருந்து வெளியேறிய கிரகங்களின் மீதம் தான் விண்கற்கள். இவை விண்வெளியில் சுதந்திரமாக சுற்றித் திரியும். ஒரு கிரகத்தின் புவியீர்ப்பு பாதைக்குள் அருகே வரும்போது புவியீர்ப்பு விசையால் இவை கிரகத்துக்குள் ஈர்க்கப்பட வாய்ப்புள்ளது.

ராட்சத விண்கல் பூமியின் புவியீர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு ஏதாவது ஒரு நாட்டின் மீது வந்து விழுந்தால் மிகப்பெரிய சேதாரம் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் பல உயிர்கள் பலியாகக் கூடும். தற்போது 3889945 என்கிற ராட்சத விண்கல் பூமியின் மிக அருகில் (2.5 மில்லியன் மைல்) கடந்து செல்ல உள்ளது.

latest tamil news

அமெரிக்காவின் எம்பயர் ஸ்டேட் கட்டிடம், பிரான்ஸின் ஈபிள் டவர் ஆகியவற்றை விட அதிக விட்டம் கொண்ட இந்த பிரம்மாண்ட விண் கல்லானது பல ஆண்டு காலமாக பூமியின் சுற்றுவட்டப் பாதைக்கு அருகே கடந்து பூமியை அச்சுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது இந்த விண்கல் பூமிக்கு மிக அருகில் செல்வது வாடிக்கை. இந்த 2022ஆம் ஆண்டை அடுத்து 2063 ஆம் ஆண்டு மீண்டும் இந்த விண்கல் பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இதுபோன்று விண்கற்கள் பூமியை தாக்காமல் இருக்க எதிர்காலத்தில் பூமி மீது மோத வரும் விண் கல்லுக்கு எதிராக ராட்சத விண்வெளி ஓடம் ஒன்றை விண்ணில் ஏவி, விண்கல்மீது மோதவிட்டு அதன் பாதையை மாற்றி திசை திருப்ப நாசா விஞ்ஞானிகள் தற்போது ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.