திமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளும் செயலிழந்து விட்டது: இபிஎஸ் குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் அனைத்து துறைகளும் செயலிழந்து விட்டது. இதற்காக கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட குரல் கொடுப்பதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சேலம் மாநகர அதிமுக சார்பில் மெய்யனூர் பகுதியில் இலவச தையற்பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. 10 நவீன தையல் இயத்திரங்களுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தை தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்… மக்களை பற்றியோ மக்கள் பிரச்னைகள் பற்றியோ கவலைப்படாத அரசு திமுக அரசு. தேர்தல் வாக்குறுதியில் கூறியவற்றை நிறைவேற்றாமல் அனைத்து தரப்பினரையிம் ஏமாற்றும் அரசாகவும் திமுக அரசு செயல்படுகிறது.
கொரோனா பரவலால் மக்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ள சூழலில் சொத்து வரி உயர்வு மக்களுக்கு மிகப்பெரிய சுமையாக உள்ளது. ஆண்டுக்கொருமுறை சொத்து வரி உயர்வு என்பது ஏற்க முடியாத சுமை.
image
டெல்டா வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்து சட்டத்தை நிறைவேற்றிய அரசு அதிமுக. யார் நினைத்தாலும் அங்கு விவசாயத்தை பாதிக்கும் திட்டங்களை நிறைவேற்ற முடியாது. நிதி ஆதாரத்தை திரட்ட இந்த அரசிடம் எந்த திட்டமும் இல்லை.
இதனால் விரைவில் போக்குவரத்து கட்டணம், மின் கட்டணம் உயரும் அரசு ஊழியர்களையும், ஓய்வு பெற்றவர்களையும் நம்பவைத்து திமுக கழுத்தை அறுத்துள்ளது. வீடு கட்டுபவர்கள் மிகப் பெரும் சோதனையை சந்தித்தித்து வருகிறார்கள். செங்கல், சிமெண்ட், கம்பி விலை உயர்ந்துள்ளது. அத்யாவசிய பொருட்கள் விலையை திமுக அரசு கட்டுபடுத்தவில்லை
சென்னையில் மாற்று இடம் ஒதுக்காமல் குடியிருப்புகளை அகற்றுவது வேதனை அளிக்கிறது. சொந்த நாட்டில் அகதிகளாய் வாழும் நிலையில் உள்ள மக்களுக்கு அரசு உதவ வேண்டும்.
அதிமுக ஆட்சியில் சேலம் – சென்னை எட்டு வழி சாலை திட்டத்திற்கு அப்போது அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், இப்போது கூட்டணி கட்சி என்பதால் அனைத்து கட்சிகளும் மௌனம் காக்கின்றன.
image
உள்கட்டமைப்பை மேம்படுத்தி வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே மத்திய அரசின் எட்டு வழி சாலை திட்டத்தை அதிமுக அரசு ஆதரித்தது. எட்டு வழி சாலை திட்டத்தால் யாரும் பாதிக்கப்படவில்லை.
அதிமுக விவசாயிகளுக்கு எதிரான கட்சி அல்ல. விவசாயிகளுக்கு கூடுதலாக இழப்பீடு வழங்க வேண்டும் இந்தியாவிலேயே தமிழகத்திற்கு தான் அதிக அளவில் விவசாயிகளுக்கு இழப்பீடு பெற்று கொடுத்துள்ளோம்
அதிமுக ஆட்சியில் 14,000 பேருந்துகள் வாங்கப்பட்டது. அதனால் தற்போது பேருந்துகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. தற்போது பேருந்துகள் பராமரிப்பு இல்லாமல் இருப்பதை ஓட்டுநர்களே தெரியபடுத்தி வருகிறார்கள். அரசு போதிய அக்கரை இல்லாமல் இருக்கிறது
நெல் கொள் முதல் நிலையங்களில் லட்ச கணக்கான நெல் மூட்டைகள் நனைவதாக செய்திகள் வருகின்றன. மழை குறித்து வானிலை அறிக்கை வருகிறது. இந்த அரசு எதை பற்றியும் கவலைபடாமல், போதிய கவனம் செலுத்தாமல் உள்ளது என்றும் குற்றசாட்டுகளை தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.